Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. கோபம் தான் எமனே.. ரொம்ப கவனம்
Dhanusu Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். கோபத்தை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும ஏற்றம் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் தகராறு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
அனுகூலம்
முதலீடுகளால் அனுகூலம் காணப்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள், பண கஷ்டங்கள் எல்லாம் நீங்கும். அதிகமான ஏற்றங்கள் கிடைக்கும் நல்ல காலகட்டம். உறவுகள் விஷயத்தில் கோபம், தகராறு போன்றவற்றை தவிர்ப்பதை நல்லது. சிறிய வாக்குவாதம் கூட பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
குடும்பம்
குடும்பத்தில் மீண்டும் ஒன்று சேருவீர்கள். தொலைதூரத்தில் இருந்தவர்கள், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, சுற்றுலாவுக்காக சென்றவர்கள் என எல்லோருமே மீண்டும் குடும்பத்தில் சேரும் யோகம் உண்டாகும். வேலையாட்கள் விஷயத்தில் கோபப்படுவது, கத்துவது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும். பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பணவரவு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் அமைப்பு உள்ளது. கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஏற்றம் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. நன்மைகளையும், அனுகூலத்தையும் பெறும் காலகட்டம்.
வழிபாடு
எல்லா விஷயங்களிலும் நிம்மதி ஏற்படும். படபடப்பு இல்லாமல் இருப்பது நல்லது. நிறைய யோக பலன்கள் கிடைக்கும். மனதில் நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் அதீத ஏற்றம் உண்டாகும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications