தவெக கல்வி விருது விழா.. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் விஜய்.. தேதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு முதல்வர் விஜய் பரிசு வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் விஜய் சட்டசபை தொகுதி வாரியாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி வருகிறார். இதில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பல்வேறு கட்டங்களாக மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Vijay to Honour Class 10 and 12 Toppers TVK Announces Date for Education Awards Ceremony in Chennai

அந்த வகையில் நடப்பு ஆண்டில் கல்வி விருது விழா இதுவரை நடைபெறவில்லை. இதனால் அரசியலுக்காக தான் விஜய் வழங்கியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 4 ஆம் தேதி தவெக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை விஜய் வழங்க உள்ளார்.

இதற்கான விழாவானது சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான டோக்கன் இன்று தவெக தலைமை அலுவலகத்தில் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் விழாவில் பங்கேற்பதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற விழாக்களில் தவெக தலைவராக விஜய் பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கிய நிலையில் முதல்வராக வரும் 4 ஆம் தேதி வழங்க உள்ளார். விஜய்யை நேரில் காண, நண்பா, நண்பிகளும் ஆர்வத்தோடு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+