எப்போதுமே வெற்றி, அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் எது தெரியுமா?.. உங்க ராசி லிஸ்ட்ல இருக்கானு பாருங்க
சென்னை: நட்சத்திரங்களின் தாக்கத்தால் 5 ராசிக்காரர்கள் எப்போதுமே அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் அனுபவிப்பவர்களா இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ச்சியாவது வழக்கம். ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள், அவற்றின் பெயர்ச்சி குறித்து இடம்பெற்றுள்ளன. கிரகங்களின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். வேத சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

12 ராசிகளில் 5 ராசிக்காரர்கள் நட்சத்திரங்களின் தாக்கத்தால் தங்களுடைய வாழ்க்கையில் எப்போதுமே வெற்றி பெறும் ராசிகளாக விளங்கி வருகின்றன. அந்த ராசிகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்: தனித்துவமாக விளக்கக் கூடியவர்கள் சிம்ம ராசியினர். இந்த ராசியினர் இயற்கையாகவே வெற்றி பெறும், அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருப்பீர்கள். சிம்ம ராசியை ஆளும் கிரகமாக சூரியன் இருப்பதால் நீங்கள் நம்பிக்கையுடன், அதீத ஆற்றலுடனும் திகழ்பவராக இருப்பீர்கள். படைப்பாற்றல், ஆர்வம், உறுதிப்பாடு ஆகியவை நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். படைப்பாற்றல், நாடகம் ஆகியவை உங்களுடைய இயல்பிலேயே இருக்கும். சிம்ம ராசியினர் பிறக்கும்போதே அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டம் பெற்றவர்களாவே பிறப்பார்கள்.
விருச்சிகம்: ஆர்வம், விடாமுயற்சிக்குப் பெயர் பெற்றவர்கள் விருச்சிக ராசியினர். இந்த இரண்டும் தான் உங்களை வெற்றிப் பாதையை நோக்கி முன்னேற்றிச் செல்லும். தடைகள் அனைத்தையும் உங்களுடைய நம்பிக்கையால் கடந்து செல்வீர்கள். வசீகரமான, ஆளுமை பண்புடையவர்களாக விளங்குவதால் எளிதில் மக்களை உங்கள் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். இயற்கையாக உள்ளுணர்வு திறன் படைத்த நீங்கள் புத்திசாலித்தனம், தலைமைத்துவம் தேவைப்படும் வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள்.
தனுசு: புதிய சவால்கள், கடினமான விஷயங்களை செய்யப் பிறந்தவர்கள் தனுசு ராசியினர். ஏதாவது புதிய விஷயம் ஒன்றை செய்ய வேண்டும் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். உங்களை ஆளும் கிரகமாக வியாழன் இருப்பதால் இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் கொண்டவர்களாக விளங்குவீர்கள். இந்த இரண்டு விஷயத்தால் மக்களை உங்கள் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டவராக இருப்பீர்கள். தனுசு ராசியினர் இயற்கையாகவே நுண்ணறிவு படைத்தவர்கள். கல்வி தொடர்பான துறைகளில் சிறந்து விளங்கும் தன்மை கொண்டவர்களாக விளங்குவீர்கள்.
மகரம்: ஒழுக்கம் என்றாலே மகர ராசியினர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்களாக விளங்குவார்கள். இந்த ஒழுக்கம் தான் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். உங்களது ராசிக்கு ஆளும் கிரகமாக சனி இருப்பதால் பொறுப்பு, கடமை உணர்வை இயல்பாகவே கொண்டிருப்பார்கள். கடின உழைப்பு, விடாமுயற்சியால் கட்டமைப்பு தொடர்பான வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள். வியாபாரம், வணிகம், நிதி, அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மேஷம்: தன்னம்பிக்கை, தைரியத்துக்குப் பெயர் பெற்றவர்கள் மேஷ ராசியினர். புதிய சவால்களையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்களாக இருப்பார்கள். ஆளும் கிரகம் செவ்வாய் என்பதால் நேர்மறை ஆற்றலை பெற்றவர்களாக இருப்பார்கள். வெற்றி உங்களை நோக்கி இயல்பாகவே வரும். போட்டித் திறன், உறுதி, தலைமைத்துவம், புதுமையான யோசனைகள் ஆகியவை தேவைப்படும் துறைகளில் மேஷ ராசியினர் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள்.
-
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications