Dhanusu Rasi Palan: தனுசு ராசியினரே "கம்முனு இருந்தா லைஃப் கும்முனு இருக்கும்"..பேச்சில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை எந்தக் கவலையும் தேவையில்லை. 2 ஆம் இடத்தில் உச்சம்பெற்ற செவ்வாய், சூரியன், சுக்கிரன் ஆகியோர் இருக்கின்றனர். அதனால், நீங்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 3 ஆம் இடத்தில் நிறைய நல்ல கிரகங்கள் மறையப் போகின்றனர். இந்த காலகட்டத்தில் தேவையில்லாத மனச் சிதைவு, குழப்பம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
லாபம் கொட்டும்
6க்கு உரிய சுக்கிரன் 3 ஆம் இடத்தில் மறைந்து விபரீத ராஜயோகத்தை கொடுக்கப் போகிறார். மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களால் நல்ல விஷயங்கள் உண்டாகும். நகை தொழில், பங்குச் சந்தை, கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்பவர்கள் போன்றோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கம். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
ஆரோக்கியம்
7, 10க்கு உடைய புதன் பகவான் 3 இல் மறையப் போகிறார். முயற்சி ஸ்தானத்தில் புதன் வரும்போது உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் கெடுப்பார். 9க்கு உடைய சூரிய பகவான், பாக்கியாவதி 3 இல் மறைவதால் அப்பாவின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் பொதுக் கூட்டத்தில் பேசும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பேச்சில் கவனம்
அரசியல், சங்கங்கள், அமைப்பு, தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இருப்பவர்கள் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் ஒரு அர்த்தத்தில் பேசியதற்கு, தவறான அர்த்தம் மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படும். இதனால், மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்படும். 9க்கு உடைய சூரிய பகவான் மறையும்போது புகழ், தலைமைப் பண்பு போன்றவை போகும் சூழல் உள்ளது. 5க்கு உரிய செவ்வாயும் 3 ஆம் இடத்தில் மறையப் போகிறார்.
தொழில்
ஆடம்பர, உயர்தர உடைகள் தயாரிப்பவர்கள், தைப்பவர்கள், நிகழ்ச்சிகளை செய்பவர்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். இந்த பிப்ரவரி மாதத்தை மெளனத்துடன் கடந்து செல்வது நல்லது. இந்த நேரத்தில் எல்லா விஷயத்தையும் கடந்து செல்வது நல்லது. மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டம் அற்புதமாகக் கொட்டும்.
கவனம்
போலீஸ், பஞ்சாயத்து, கோர்ட், பழைய நிறுவனத்தினரைப் பார்த்து முக்கிய விஷயங்களைப் பேசுவது போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பிரச்சனைகளில் இறங்காமல் இருப்பது நன்மை பயக்கும். மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பண வரவு நன்றாக இருக்கும். ஏற்றம் தரும் காலகட்டமாக இருக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications