மகரத்துக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் குரு, சுக்கிரன் - பிப்ரவரி மாதத்தில் பெறப்போகும் பலன்கள்
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் மகர ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவர் 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்தில் உள்ளார். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.
சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூராட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார். இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், மிதுவான் செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு என்று தனிப்பட்ட குணம் உண்டு. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எப்படி இலக்கை நோக்கிப் பயணிக்குமோ அதேபோல இலக்கை நோக்கி பயணிப்பவர்களாக இருப்பார்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் மகிழ்ச்சியான மாதமாக பிப்ரவரி மாதம் இருக்கும். பாக்கியாதிபதி புதன் பகவான் ராசியில் பல நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாதிகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். மருத்துவ ஆலோசனை பெற ஏற்ற நேரம்.
இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உண்டாகும். மூச்சு தொடர்பான பிரச்சனை, காது தொடர்பான பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எட்டாம் இடத்திற்குரிய சூரியன் ராசியில் அமர்ந்துள்ளார். 6க்குரியவர், 8க்குரியவர் ராசியில் அமர்ந்துள்ளதால் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கியமான வரிகளைச் செலுத்துவது நல்லது.
தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தந்தைக்கு உடல் நல பாதிப்புகள் வர வாய்ப்பிருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இரண்டாம் இடத்தில் சனி, புதன் சேர்வதாலும், 13 ஆம் தேதியில் இருந்து அஷ்டாமதிபதியும் சேர்வதால் வாக்கினால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வாக்குறுதி, உறுதிமொழி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மூன்றில் உள்ள சுக்கிரன் நன்மையான கிரகமாக உள்ளது. நல்ல பொருளாதார வளர்ச்சி பெறும். மூன்றில் உச்சம் பெறுவதால் உங்களுடைய மகள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்து கொடுக்கும். சுக்கிரன் ராகுவின் சேர்க்கை அலர்ஜி, சளி பிரச்சனைகள், கண் பிரச்சனைகள் பாதிப்புகள் ஏற்படும். நகைகள் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் உங்களுக்கு இயலாத விஷயங்களை பிறருக்கு செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. குரு பகவானுடைய பார்வை இருப்பதால் அனைத்து விதமான உயர்வுகளையும் கொடுக்கும். நிதி சார்ந்த பலன்கள் அள்ளிக் கொடுப்பார்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோயில் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. ஆறில் செவ்வாய் இருப்பதால் சில உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். எதிரிகள் உங்களை வீழ்த்த பார்ப்பார்கள். உடம்பில் ரத்தம் சம்பந்தப்பட்ட, ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டம் நிறைந்த நன்மைகளைத் தரும் காலமாக இருக்கும். வியாபாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குருவின் பார்வை என அனைத்து சம்பத்துகளும் உண்டாகும். மதுரை வீரன் வழிபாடு உங்களுக்கு நற்பலன்களைத் தரும். சுக்கிரனுடைய அனுகூலம் மிகச் சிறப்பாக இருப்பதால் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications