துலாம் ராசிக்கு மாற்றத்தை கொடுக்கும் சுக்கிரன்.. ஆனா வாயில தான் கண்டம்
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் துலாம் ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.
துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்து கொடுக்கும். உங்களுடைய ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார். வாழ்க்கையில் உச்சத்தை தொடும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தித் தரும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு பிரபல நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு, நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நல்ல வேலைவாய்ப்பு ஏற்படும்.
ஆறாம் இடம் எப்படி வேலைவாய்ப்பைத் தருகிறதோ அதே சமயம் நோய் நொடியையும் தரும். சிலருக்கு தோல் வியாதி, சர்க்கரை, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. துலாம் ராசிக்காரர்களுக்கு தோல் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு தான்.
ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராகு பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் வரும்போது தோல் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். வரக்கூடிய பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு உணவுகள் தான் காரணமாக இருக்கும். பசிக்கும்போது மட்டும் தேவையான அளவு சாப்பிடுவது நல்லது. வயிறு தான் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். சாப்பிடும் விஷயத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது
மாணவர்களுக்கு இந்த மாதம் அருமையான மாதமாக இருக்கப் போகிறது. பாக்கியதிபதியான புதன் பகவான் நான்காம் இடத்தில் லாபதிபதியான சூரியனுடன் அமர்ந்திருப்பதால் படிப்பின் மூலமாக லாபம் வந்து சேரும். படிப்பின் மூலமாக வெற்றி வந்து சேரும். முன்னேற்றமான காலமாக இருக்கும். ஐந்தாம் இடத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு போவதால், அங்கு புதன் சனியின் சேர்க்கை அமைகிறது.
புதன் சனியின் சேரக்கையால் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு குழப்பமான நேரமாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. தன ஸ்தானதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருப்பதால் திருமண வரன் பார்ப்பதை நிறுத்துவது நல்லது. பெண்களுக்கு வரன் பார்ப்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குடியிருக்க கூடிய வீடு கார்னரில் இருந்தால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். துலாம் ராசியினருக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
6க்குரிய குருவும், 8க்குரிய சுக்கிரனும் பரிவர்த்தனை அடைவதால் இந்த காலகட்டத்தில் உடல் நலனில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வேலை மாறக்கூடிய வாய்ப்பு இருக்கும். பொருளாதார ரீதியாக மாற்றம் ஏற்படுமே தவிர பெரிய பாதிப்புகள் வராது. நிறைய பொருள்களை வாங்குவதற்கான யோகம் உண்டு. வேலை மாற்றத்துக்கான வாய்ப்பு உருவாகும். நரம்பு பிரச்சனைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டங்கள் பெருக காஞ்சி காமாட்சியை வழிபாடு செலுத்துவது நல்ல பலன்களைத் தரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications