குரு அதிசாரப் பெயர்ச்சியில் 3 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் யார், கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள், கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
குரு உங்கள் தன ஸ்தானத்தில் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். 3 ஆம் இடத்தில் குரு வருவதால் தாம்பத்ய வாழ்க்கையில் நன்மை பெறுவீர்கள். சிலருக்கு காரியத் தடை, பயணத் தடைகளை ஏற்படும். 3 ஆம் இடத்தில் குரு வந்து நேரடியாக பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பாக்கியத்தை அவர் பார்ப்பதால் வெளிநாட்டு பயணங்கள் அமையும். புகழ், கீர்த்தி உண்டாகும். திருமண விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய திருமண வரன்கள் அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் தொடர்பான நல்ல பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
மாணவர்கள் புதிய படிப்புகளை படிக்கும் வாய்ப்பு ஏற்படும். ஜோதிடத் துறையில் உங்கள் புலமைக் கூடும். நல்ல பெயர் புகழ் கிடைக்கும். 9 ஆம் இடம் என்பது உங்கள் பாதக ஸ்தானம். அப்பாவுடைய மனதை நோகடிப்பீர்கள். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உடம்பில் நீண்டகாலமாக வியாதிகள் இருந்தால் அந்த வியாதி பரிபூரணமாக நீங்கும். நல்ல மருத்துவ ஆலோசனை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடுத்தடுத்து பண வரவு அதிகரிக்கும். லாபத்தை குரு பார்ப்பதால் அலுவலகத்தில் இருந்து பதவி உயர்வு தொடர்பான செய்திகள் வந்து சேரும். காராம்பசுவின் பாலைக் கொண்டு வியாழக்கிழமைகளில் சிவனுக்கு வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராசியில் குரு உச்சமடைவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சொந்த தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் தொடங்குவீர்கள். எதிரிகள் குறையத் தொடங்குவார்கள். எதிரிகள் சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான யோகம் உண்டாகும்.
புகழ், வெற்றியை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான கல்வி உங்களுக்கு அமையும். நல்ல பதவிகள், பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண கைகூடாதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் கைகூடும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல அங்கீகாரம் கிடைக்கும். ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்வது, பிரம்மாவை வழிபாடு செய்வது அற்புதத்தை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். குரு பகவான் தற்போது 5 ஆம் இடத்துக்கு அதிசாரமாக வருகிறார். 5 ஆம் இடம் என்பது குருவுக்கு உச்ச வீடு. பல மீன ராசிக்காரர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். சிலருக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்களது ராசிக்கு அதிபதி, 10 ஆம் இடத்துக்கு அதிபதி. நல்ல தொழில் செய்ய குரு பகவானின் அருள் வேண்டும். குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு அதிசாரமாக வருகிறார். பூர்வ புண்ணியத்தின் பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். யாருக்கெல்லாம் வேலையில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த பிரச்சனைகளை எல்லாம் குரு பகவான் தீர்த்து வைக்கப் போகிறார்.
குழந்தை பாக்கியம் உண்டாகும். அலுவலகத்தில் நல்ல பதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். மனதில் நினைப்பதெல்லாம் கண்டிப்பாக நடக்கும். பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பொன், பொருள் பெருகும். வியாபாரம் தழைக்கும். உயர்கல்வி படிப்பதற்கான யோகம் உண்டாகும். வேலையில் உள்ள சிக்கல்கள் தீரும். பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
எதிரிகள் தொல்லை விலகும். ரேவதி நட்சத்திரக்காரர்களாக இருந்தால் கணவன், மனைவி பிரிவுகள் சரியாகும். படிப்பில் இருக்கும் தடைகள் சரியாகும். வீடு கட்டுவதில் உள்ள பிரச்சனை, சொத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்வது அற்புதமான முன்னேற்றத்தை கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications