கடக ராசிக்கு குரு உச்சம்.. அடுத்தடுத்து வரும் "லக்".. மிஸ் பண்ணிடாதீங்க
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கும், அதற்கு தீர்வு கொடுப்பவரும் குரு பகவானே. உங்கள் ராசியில் குரு உச்சமடைவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு உச்சமாக இருந்தாலும் சில பகைமைகள், சிறு சிறு பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பேர் வேலையை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.
குழந்தை பாக்கியம்
கடக ராசியினர் குழு குழுவாக வேலையை விடுவதற்கான காலகட்டம். நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் தொடங்குவீர்கள். எதிரிகள் குறையத் தொடங்குவார்கள். எதிரிகள் சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
புகழ், வெற்றி
மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான யோகம் உண்டாகும். புகழ், வெற்றியை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான கல்வி உங்களுக்கு அமையும். நல்ல பதவிகள், பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் கைகூடாதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் கைகூடும், 90 களில் பிறந்தவர்களுக்கு கட்டாயம் திருமணம் நடக்கும். சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணத்துக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
திருமணம்
விவாகரத்து பெற்றவர்களுக்கு கட்டாயமாக இரண்டாவது திருமணம் நடக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல அங்கீகாரம் கிடைக்கும். நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நல்லவர்களாக தர்மத்துடன் செயல்பட்டால் கட்டாயமாக குரு அற்புதமான வளர்ச்சியைக் கொடுப்பார். ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்வது, பிரம்மாவை வழிபாடு செய்வது அற்புதத்தை தரும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications