Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். இதனால், ஆரோக்கிய குறைபாடு, வேலையில் பிரச்சனையில் ஏற்பட்டிருக்கும். திருமண வாழ்க்கையை நினைத்து உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருப்பார்கள். பாதக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களுக்கு வரும் பாதகத்தை நிவர்த்தி செய்வார். எதிலும் அதிகம் ஆசைப்படாமல் பற்றற்று இருப்பது நல்லது.
வெளிநாடு வேலை
ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். நல்ல நூல்களைப் படிப்பது நன்மையை ஏற்படுத்தும். வெளிநாட்டில் இருந்து கொண்டு வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனை நிவர்த்தியாகும். உங்கள் புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல குழந்தை பாக்கியம் அமையும்.
படிப்பு
வெளிநாட்டு படிப்பு, வியாபாரம் அமையும். ஆராய்ச்சி தொடர்பான படிப்புகள் படிப்பதற்கான வாய்ப்புகள் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பதவிகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதும், உரிய மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது.
குருவால் யோகம்
குரு பகவான் லாபத்துக்கு வருவது பெரிய யோகத்தை ஏற்படுத்தும். நல்லவர்களின் ஆலோசனை, தொடர்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மன தைரியம் பெருகும். நிறைந்த நன்மைகள் கிடைக்கும். பாதங்கள் தீரும். வெளிநாடு வேலை கிடைக்கும். தான தர்மம் செய்வது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
பரிகாரம்
குறிப்பாக, நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளுக்கு உணவளிப்பது அற்புதமான யோகத்தையும், நன்மையையும் தரும். ஜீவ காருண்யத்தைப் பேணுவது நல்லது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications