Guru Athisara Peyarchi: சிம்ம ராசிக்கு டும் டும் கன்ஃபார்ம்.. யோகங்கள் கொட்டும் நேரம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் சனி அமர்ந்திருப்பதால் பல்வேறு பாதிப்புகளையும், தடைகளையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் சனி உங்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும். வேலையில், குடும்பத்தில் நிம்மதி இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள். மனைவியால் மன நிம்மதி கெட்டிருப்பீர்கள். பெண்களுக்கு கணவன் மீது மிகுந்த கவலை, வருத்தம் இருக்கும்.
குரு பார்வையால் நன்மை
திருமணம் கூடி வரவில்லை என்று இளைஞர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். திருமணம், வேலை, குடும்பம் என எல்லாவற்றிலும் பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள். குரு தற்போது லாபத்தில் இருக்கிறார். இதுவே பெரிய நன்மையாகும். தற்போது அயன சயன ஸ்தானமான 12 ஆம் இடத்துக்கு வருவதால் பல்வேறு யோகங்களைப் பெறுவீர்கள்.
திருமண யோகம்
நிறைய சிம்ம ராசிக்கு தாம்பத்திய வாழ்க்கை சரியாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் கைகூடி வரும். களத்திர ஸ்தானதிபதியை குரு பார்ப்பதால் நிச்சயமாக திருமணம் ஆகும். குரு 9 ஆம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திருமணம் கைகூடி வரும்.
நிம்மதி பிறக்கும்
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். தங்கத்தை வாங்கி வைப்பீர்கள். தாம்பத்தியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அம்மாவுக்கும், உங்களுக்கும் இடையே இருந்த மனக் கசப்பு, மனக் குழப்பம் அனைத்தும் நீங்கும். தாய் வழியில் மன நிம்மதி கிடைக்கும். அரை குறையில் நிற்கும் வீடுகள், புதிய வீடுகளை கட்டி முடிப்பீர்கள்.
புதிய வேலை
வேலை செய்யும் இடத்தில் பட்ட அவமானங்கள் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பிசினஸ் பார்ட்னர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள் நீங்கும். நிறைய நன்மைகள் உண்டாகும். அருகில் இருக்கும் திருக்கோயிலுக்கு விளக்கு வாங்கிக் கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications