குருப்பெயர்ச்சி: ஜாவா சுந்தரேஷன் போல மாறும் தனுசு ராசி.. தங்கம், நிலம், வீடு வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

Guru peyarchi Dhanusu

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோர்சனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோர்சனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிக்காரர்கள் இதுவரை தாங்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்திருப்பீர்கள். எந்த வேலையைத் தொட்டாலும் வெற்றி இல்லையே என்ற மனக் கவலையில் இருந்திருப்பீர்கள். குரு பகவான் தற்போது தன் வீட்டை தானே பார்ப்பதால் அமோகமான பலன்கள் கிடைக்கும். இனி தைரியமாக அடி எடுத்து வைக்கும் காலகட்டமாக இருக்கும்.

தொட்டது துலங்கும்

கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தாயார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் குரு பகவான் பார்வையிடுவதால் அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வெளியில் தைரியமாக வந்து வேலைகளை எடுத்துச் செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டாகும்.

திட்டமிடல்

சேமிப்பு செய்யத் தொடங்குவீர்கள். திட்டமிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். டிரேடிங், பங்குச் சந்தை போன்றவற்றை செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். 3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் லாபத்தை பெருக்குவதற்கான சூட்சமத்தை கண்டறிவீர்கள். ராசிக்கு 9 ஆம் இடத்தில் கேது இருப்பதால் அடுத்து நீங்கள் செய்யும் விஷயங்களை சொல்லாமல் இருப்பது நல்லது. லாபம் பற்றி வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. கண் திருஷ்டி போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

லாபம் அதிகரிக்கும்

விவசாயத்தில் இருப்பவர்களுக்கு லாபம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விவசாயத்துக்கான வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்துகளை சேர்க்கும் யோகம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவித உற்சாகம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்

புதிய பொறுப்புகள், பதவிகள் வந்து சேரும். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். தனுசு ராசி மனைவிகள், கணவர்கள் தங்கள் துணையிடம் சண்டைகள், பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. கஞ்சனூர் சுக்கிர ஸ்தலம், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். அந்தக் கோயிலில் உள்ள பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்லது. பணம், காசு கொடுக்க கூடாது.

உடற்பயிற்சியில் கவனம்

அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. நல்ல உடற்பயிற்சி செய்து வந்திருப்பீர்கள். கடந்த 7, 8 ஆண்டுகளாக உடற்பயிற்சியைத் தவிர்த்திருப்பீர்கள். உடற்பயிற்சியை செய்யவில்லை எனில் கழுத்து, முதுகு தண்டுவடம், கால் வலி தொந்தரவுகளால் சிரமம் ஏற்படும். வயிற்றில் சிறிய உபத்திரவம் ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது. உணவு முறையில் கவனம் தேவை.

நிலம், வீடு, நகை வாங்கும் யோகம்

குரு சொந்த வீட்டை பார்ப்பதால் வீடு, நிலம், நகை வாங்கும் யோகம் உண்டாகும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். தைரிய ஸ்தானத்தில் குரு பார்வை, ராகு ஏற்கனவே இருப்பதால் பயணம் செய்வற்கான யோகம் உண்டாகும். உறவினர்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

வீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். மனநிறைவான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பிறர் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலைக்காரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+