குருப்பெயர்ச்சி: குரு பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
Guru peyarchi 2025: 2025 இல் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் குருப்பெயர்ச்சியும் ஒன்று. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மே 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. குருவின் பார்வை பலத்தால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகும் 5 ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஞானக்காரகன், கல்விக் காரகன், செல்வக் காரகன் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான். சனி பகவானை விட குரு பகவான் மிகவும் மெதுவாக பயணிக்க கூடியவர். இந்த ஆண்டில் மிதுன ராசியில் 13 மாதங்கள் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர்.

மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் குருவின் பார்வை பலத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம் - கஞ்சனூர் சுக்கிர ஸ்தலத்திற்கு சென்று வருவது அனுகூலத்தை தரும். மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சையை தள்ளிப் போடாமல் செய்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம், படிப்பு, சமுதாயம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களில் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தரும் காலகட்டமாக இருக்கும். பெற்றோர் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தாய் வழி, தந்தை வழி உறவுகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கோபப்படுவது, சபிப்பது, சண்டையிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வழக்குகள் சாதகமாக முடியும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மிகப்பெரிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். காது, மூக்கு, தொண்டையில் சிறு சிறு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம் - இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல யோகம் உண்டாகும். வண்டி, வாகன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருநள்ளாறு செல்வது நல்ல பலன்களைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காரிய சித்தி மாலை கேட்பது நல்லது. திருமணத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களுக்கு அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். பண வரவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பணப் பிரச்சனைகள் தீரும். முதலீடுகள் அதிகமாகும். சம்பள உயர்வு பதவி உயர்வு உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
துலாம் - அஷ்டமத்தில் இருந்த குரு 9 ஆம் இடத்துக்கு வருகிறார். தென்குடி திட்டையில் உள்ள ராஜகுருவை தரிசிப்பது அனுகூலத்தை உண்டாக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் அருமையான முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மிகச்சிறந்த மாற்றங்கள் ஏற்படும். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு திருமணம், படிப்பு, காதல் அமைப்பில் ஏற்றம் பெறும்.
உள்ளூர், வெளியூர், தெய்வீக பயணங்கள் செய்வீர்கள். இனம் புரியாத பயம் விலகும். வீடு, நிலம் வாங்குவது போன்ற சுப செலவுகளை செய்வீர்கள். பெற்றோரின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் சமாளிக்கும் காலகட்டம், பெண்கள் புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகள் அபரிமிதமான வெற்றியைத் தரப் போகிறார்.
தனுசு - 7 ஆம் வீட்டுக்கு குரு வருகிறார். குரு 7 இல் இருந்து பார்ப்பதால் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் உண்டாகும். நிறைய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பெற்றோர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.
பெண்களுக்கு ஜாக்பாட் உண்டாகும் காலமாக இருக்கும். நகை வாங்கும் யோகம் உண்டு. எதைப் பற்றியும் கவலைப்படாத காலகட்டமாக இருக்கும். பயணத்தின்போது ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்தில், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் எச்சரிக்கை. கஞ்சனூர் சுக்கிர ஸ்தலத்தில் வழிபாடு செய்வது நல்லது. கால், வயிறு தொடர்பான பிரச்சனை வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
கும்பம் - மகர ராசிக்காரர்களுக்கு அதிபதி சனி பகவான். ஏழரை சனி விலகிவிட்டது. வாகனத்தில் கவனம் தேவை. நரம்பு, கழுத்து, முதுகு தண்டுவடம், கழிவுப் பாதையில் கவனம் தேவை. எளிமையான உணவுகளை உட்கொள்வது நல்லது. உணவுக் கட்டுப்பாடு கட்டாயம். தொழில் தொடங்குவதற்கான ஏற்றம் உண்டாகும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள்.
படிப்பு விஷயத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். மீடியா, சினிமா, ஏஐ, மெடிக்கல், மருத்துவத் துறையில் இருந்தவர்கள் விருது பெறுவீர்கள். மன அழுத்தம் விலகும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். திருவெண்காடு புதன் ஸ்தலத்துக்குச் சென்று அகோர மூர்த்தியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
-
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications