குருப்பெயர்ச்சி: கன்னி ராசிக்கு அடுத்தடுத்து சூப்பர் மாற்றம்.. பணமழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

guru-peyarchi-2025-we-will-look-at-the-benefits-of-guru-peyarchi-for-kanni-people-and-the-deities-t

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோசனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 10 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். அங்கிருந்து ராசிக்கு இரண்டாவது இடத்தை குரு பகவான் பார்ப்பது நல்ல விஷயம். உத்யோகத்தில் முயற்சி செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். பிரிந்த குடும்பத்தினர் ஒன்றிணைவார்கள். வெளி நாடு, வெளி மாநிலம் ஆகிய பகுதிகளில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாய்ப்புள்ளது.

வெற்றி

புதிய வண்டி, வாகனம், நிலம் வாங்குவதற்கான சூழ்நிலை உள்ளது. உங்கள் ராசியில் இருந்து கேது பகவான் விலகியுள்ளார். தடைகள் நிவர்த்தியாகி அணுகூலம் ஏற்படும். குரு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பொருளாதாரம்

குரு பகவான் பார்வை நான்காம் இடத்திலும் விழுவதால், உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குரு பகவான் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் காரியத்தில் இருந்த தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றம் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

எதிரிகள்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்கள் குறையும். பெற்றோரால் ஆதாயம் உண்டு. எதிரிகளிடம் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வீடு, இடம், பணி, தொழில் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழும். நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்கள் சில நிகழும்.

உத்யோகம்

உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு உத்யோகத்தில் பணி பறிபோவதற்கான வாய்ப்பும் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படலாம். எனவே வாக்குறுதி கொடுப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். புதிய கடன்கள் உருவாகும்.

கவனம்

போதாக்குறைக்கு ராசியை சனி பகவான் பார்க்கிறார். அதனால் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வந்து செல்லும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுவாசம், அலர்ஜி பிரச்னை ஏற்படும். வீண் அலைச்சல் உருவாகும். தொழிலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

குடும்பத்தில் அந்நியர் தலையீடு வேண்டாம். பிறர் குடும்ப விவகாரத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. எதிர் பாலினர் விவகாரத்தில் அதிக கவனம் வேண்டும். திருக்கொள்ளிக்காடு சனி பகவான் கோயிலுக்கு சென்று எண்ணெய் தீபம் வைத்து வழிபாடு செய்வது கன்னி ராசியினருக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+