குருப்பெயர்ச்சி: சொல்லி அடிக்கும் மகர ராசி.. கொட்டும் பணம், அதிர்ஷ்டம்.. வாயிலதான் கண்டமே
குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையிமகரல் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.
குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோர்சனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோர்சனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள்
மகர ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 2 ஆம் இடத்தை குரு பார்க்கிறார். மகர ராசியைப் பொருத்தவரை உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று தடுமாற்றமும், கவலையும் இருந்திருக்கும். இந்த குருப்பெயர்ச்சியில் உங்களுடைய உழைப்புக்கேற்ற கண்டிப்பாக கிடைக்கும். உழைப்பு, திறமையின் மூலம் வாழ்க்கையில் பல மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக்க கூடிய அமைப்பு உண்டாகும்.
தடைகள் நீங்கும்
குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வுகள், சுப விரைய செலவுகள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பாதியிலேயே கட்டப்பட்டு நிற்கும் வீடுகளை கட்டி முடிப்பீர்கள். அதற்கான கடன்கள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்களிடம் உதவி கேட்கலாமா என்ற யோசனையில் இருந்திருப்பூர்கள், வரும் காலத்தில் நட்பு வட்டத்தின் மூலமாக உதவிகள் கிடைக்கும்.
முன்னேற்றம்
வாழ்க்கையில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இதுநாள் வரை நிம்மதி இல்லை என்று புலம்பிய காலம் எல்லாம் மாறப்போகுது. சரியான வேலை அமையும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வேலை மாற்றம் உண்டாகும். 10 ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
வெற்றி மேல் வெற்றி
2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் பெருகும். 6 ஆம் இடத்தில் குரு இருப்பதால் எடுத்த ஒவ்வொரு அடியிலும் வெற்றியைப் பெறுவீர்கள். 12 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடனை அடைத்து முடிப்பீர்கள். ராசி நாதனே மூன்றாம் இடத்தில் போவதால் கண்டிப்பாக உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் காலகட்டமாக இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்
திருவெண்காடு புதன் ஸ்தலம், குருவாயூர் கிருஷ்ணரை சென்று வழிபடுவது ஏகப்பட்ட வெற்றிகளைத் தரும். 8 இல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நரம்பு பிரச்சனை, முதுகு தண்டுவடம், கழுத்து வலி போன்ற பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. அடிவயிறு, கழிகள் போகும் இடத்தில் வரும் பிரச்சனை, மாதவிடாய் கோளாறு பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை
சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும் சமாதானமாகச் செல்வது நல்லது. குடும்பத்தில் அனுகூலமான அமைப்பு ஏற்படும். தனம், குடும்பம், அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பில் முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
பதவி, சம்பளம் உயர்வு
பதவி உயர்வில் இருந்த தடை நீங்கள் நல்ல பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். அஷ்டமத்தில் கேது இருப்பதால் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் வித்தைகளை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. வழுக்கலான இடங்கள், நடப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் அர்ச்சனை செய்வது, காரியசித்தி மாலை மந்திரம் கேட்பது, வாசிப்பது நல்ல பலன்களைத் தரும்.
பேச்சில் கவனம்
அஷ்டமத்தில் கேது, 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக, சுப விரையம் ரீதியாக, வாக்கு கொடுத்தது ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். ஆடிட்டர்கள், பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், வழக்குரைஞர்களுக்கு நல்ல பம்பர் காலமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications