குருப்பெயர்ச்சி: மீனம் ராசிக்கு திடீர் ஜாக்பாட்.. உயரும் வசதி வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

guru-peyarchi-2025-we-will-look-at-the-benefits-of-guru-peyarchi-for-meenam-people-and-the-deities

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோர்சனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோர்சனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மீனம் ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள்

மீனம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் தான் ராசி அதிபதி. அவர் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து அவர் 8,10,12 ஆகிய இடங்களை பார்க்கிறார். நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள், சிக்கல்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சியடையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில்

அலைச்சல்கள் இருந்தாலும் காரியங்களில் வெற்றி இருக்கும். வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். பழைய தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்தப் பிரச்னைகள் நிவர்த்தியாகும். குரு பகவான் நான்காம் இடத்துக்கு வந்திருப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும்.

திறமை

உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் பெயர், புகழ் அதிகரிக்கும். சுப காரியங்கள் நிறைவேறும். வீடு, நிலம், ஆபரணங்கள் என்று சொத்துகள் சேர்ந்து வசதி, வாய்ப்புகள் கூடும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் திடீர் அதிர்ஷ்டம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

ஜாக்பாட்

சிலருக்கு திடீரென்று ஜாக்பாட் அடிக்கும். அடிமை தொழிலில் இருந்து விலகி புதிய தொழில் தொடங்கி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி தொழில், இடைத்தரகர் சம்பந்தப்பட்ட தொழிலில் பிரம்மாண்ட வெற்றி, முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.

தூக்கம்

சனி பகவான் ஜென்ம ராசியில் இருக்கிறார். அதனால் எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது முக்கியம். ராகு பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்தில் அதிகம் கவனம் வேண்டும். நீங்களாக இறங்கும் காரியத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. மற்றவர்களை நம்பு இறங்கும் காரியங்களில் வெற்றி கிடைக்காது.

கவனம்

கலை, சினிமா, ஊடகம், ஐடி ஆகிய துறைகளில் இருப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நியாபக மறதி, கவனக்குறைவு, சோம்பேறித்தனம் ஆகியவற்றால் பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முதலீட்டில் அதிக கவனமாக இருக்க வேண்டும். தாய், தந்தை உறவு, ரத்த பந்த உறவுகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்

வண்டி, வாகனத்தில் எச்சரிக்கை தேவை. பண வரவு சற்று சுமாராக தான் இருக்கும். எதிலும் அகலக்கால் வைக்காமல் இருப்பது முக்கியம். சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து பணிகளை சுறுசுறுப்புடன் பணியாற்றுவது நல்லது. பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செய்வதும், சூரியன் வழிபாடும் உங்களுக்கு நன்மை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+