குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு அடுத்தடுத்து ராஜயோகம்.. தொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்
குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.
குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோசனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக வருகிறார். இதற்கு முன்பு வரை விரைய குருவாக இருந்ததால் பண விஷயங்களில் நிறைய ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பீர்கள். அதீத அழுத்தம் உண்டாகியிருக்கும். தற்போது குரு ஜென் குருவாக வந்தாலும் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. 5, 9 ஆம் பார்வையாக வருவதால் மிதுன ராசிக்காரர்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் நடப்பதற்கான யோகம் உண்டு.
ஆரோக்கியத்தில் கவனம்
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பத்தில் சனி இருப்பதால் புதிய தொழில் செய்வதற்கான யோகம் உண்டு. அதில் கடின உழைப்பைச் செலுத்தினால் அபரிமிதமான யோகம் உண்டாகும்.
சுபகாரியம், சுபவிரையம்
மூன்றாம் இடத்தில் கேது வருவதால் மன குழப்பங்கள் ஏற்படும். அந்த குழப்பங்களை சரியான வகையில் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. மற்றபடி அனைத்து கிரகங்களுமே நல்ல நிலையில் உள்ளதால் நற்பலன்கள் கிடைக்கும். 5, 7, 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நல்லதை செய்து கெட்ட பெயர் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. சுபகாரியங்கள், சுப விரைய செலவுகள் ஏற்படும். பட்ஜெட்டுக்குள் செலவு முடியாமல் கடன் வாங்குவதற்கான சூழல் உள்ளது.
திட்டமிடல் அவசியம்
புத்திர பாக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் யோகம் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனியாக செல்வது, மாடி வீடு கட்டிச் செல்வதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்தை சரியாக கணக்கிட்டு, திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
புத்திர பாக்கியம்
குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் குலதெய்வ வழிபாடுகளால் புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகளில் நிவர்த்தி ஏற்படும். சொத்துகள் கைகூடக் கூடிய நேரமாக இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும், கெளரவத்தையும் ஏற்படுத்தித் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
வழிபாடுகள்
மிதுன ராசிக்காரர்களுக்கு வைத்தீஸ்வரம் கோயிலில் வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும். 24 வயதானவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குரு ஜென்மத்தில் இருப்பதால் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஹார்மோன் பிரச்சனை, பிளாக், முதுகு, கழுத்து, இதயத்தில் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. மற்றபடி அமோகமான காலகட்டம்.
மாற்றம், முன்னேற்றம்
இடமாற்றம், மனை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகும். பணத் தட்டுப்பாடு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். துணை அல்லது துணைவியார் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெற்றோர், பெரியோரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் பெற்றோர்களை அழைத்துக் கொள்ளும் நேரமாக இருக்கும்.
தொழில்
பிரிந்த தம்பதிகள் சேரக்கூடிய காலகட்டம். கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பு, தொழில் உத்தியோகம், வியாபாரத்தில் அதீத முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும் காலகட்டம். மிதுன ராசியினர் உள்ள வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். சொந்த தொழில் செய்யும் வாய்ப்புண்டு. காதல் கைகூடும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications