குருப்பெயர்ச்சி: தனுசு ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. ராஜயோகம், பணம், அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
குருப்பெயர்ச்சி பலன்: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினர் என்ன விதமான நற்பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியானது மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷபத்தில் இருந்து குரு பகவான் மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். குரு பகவான் தனது சொந்த வீட்டையே பார்ப்பது தான் இந்த குருப்பெயர்ச்சியில் விசேஷம்.

இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம், பொருளாதாரம், செல்வம், உயர்வு என அனைத்து விதமான நற்பலன்களையும் 5 ராசிகள் பெறப் போகின்றன. அதில் தனுசு ராசியினரும் ஒருவர். அந்த வகையில், தனுசு ராசியினர் என்ன அதிர்ஷ்ட பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்
இந்த குருப்பெர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பாசிட்டிவாக உள்ளது. ஆன்மீக நாட்டம், ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். நிறைய புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய நல்ல நண்பர்கள், மனிதர்கள் பழக்க வழக்கங்கள் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் நல்ல விஷயங்கள் நடக்கும். கோபமான, மன அழுத்தமாக இருக்கும்போது சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது நல்லது.
ராசியை குரு பார்ப்பதால் அதீத உடல் பருமன் ஆவதற்கான வாய்ப்புள்ளதால் சாப்பிடும் விஷயத்தில் கவனம் தேவை. எதார்த்த மனிதர்களுடன் மட்டும் பழகுவது நல்லது. தற்பெருமை பேசுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. வேலைவாய்ப்பில் அதிக அளவிலான முன்னேற்றம் ஏற்படும். நினைத்த வேலை, நினைத்த இடத்தில் வேலை, புதிய வேலை, பிடித்த வேலை என அனைத்து நல்ல விஷயங்களும் அமையும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
வேலை செய்து வந்தவர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். 4 பேரை வேலைக்கு வைத்து வேலை வாங்கும் யோகம், அதன் மூலம் முன்னேறும் யோகம் உண்டாகும். முதலாளிகளாக மாறும், தொழில் முனைவோராக மாறும் யோகம் உண்டாகும். 7 இல் குரு வருவதால் திருமண யோகம் உண்டாகும். ஜாதகப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம்.
குரு பார்வை இருப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு கட்டாயமாக குழந்தை பாக்கியம் உண்டாகும். கடவுள் அனுக்கிரகத்தால் குழந்தை பிராப்தம் உண்டாகும். உணவால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சாப்பாடு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கடன் பிரச்சனை நீங்கும். கடன் பிரச்சனையில் இருந்து யாரோ ஒருவருடைய உதவியால் கட்டாயமாக வெளியில் வருவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களைத் தூக்கிவிடும் காலகட்டமாக இருக்கும். உதவி கேட்டால் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வளர்ச்சி, முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.
நீடூர் என்ற பகுதியில் உள்ள அபயபிரதாம்பிகை கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். வியாழக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். விரதம் இருக்க முடியாதவர்கள் எளிய உணவுகளை சாப்பிட்டு, சுவாமியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். பேரீச்சம்பழம், கீரை, பீட்ரூட் போன்ற இரும்புச் சத்து நிறைந்த தானம் செய்வது நற்பலன்களைத் தரும்.
-
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications