குருப்பெயர்ச்சி: சொல்லி அடிக்கும் தனுசு ராசி.. கோடீஸ்வர யோகத்தால் பணம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

guru-peyarchi-2025-what-kind-of-benefits-will-receive-dhanusu-sagittarius-zodiac-signs-during-thi

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் படாத பாட்டை தங்களது வாழ்க்கையில் அனுபவித்திருப்பார்கள். குரு 7 ஆம் இடத்தில் இருக்கம்போது நிறைய ஆர்வம் ஏற்படும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் மேலோங்கும். பிறருடன் சேர்ந்து ஏதாவதொரு காரியம் செய்யலாம் என்று தோன்றும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். பயணங்கள் வெற்றியைத் தரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

எந்தவொரு காரியத்தையும் நடப்பதற்கு முன்பு வெளியில் சொல்வதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடிய காலமாக இருக்கம். அர்த்தாஷ்டம சனி இருப்பதால் அனுபவத்தையும், சங்கடத்தையும் கொடுப்பார். பணம் கொடுக்கும்போது, வாங்கும்போது, கையெழுத்தில்லாமல் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. செல்போனில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையார் வழிபாடு செய்தால் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

7 ஆம் இடத்துக்கு குரு வருவது தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக எதை எல்லாம் இழந்தீர்களோ இந்த ஓராண்டில் அதை எல்லாம் பெறும் வாய்ப்பு அமையும். எந்த விஷயத்தை எல்லாம் செய்ய முடியவில்லை என்று ஏங்கினீர்களோ அதை எல்லாம் செய்வீர்கள். ராசிநாதனாக இருக்கும் குரு உங்கள் வீட்டையே பார்க்கிறார். 3 ஆம் இடத்தில் குருவையும் ராகு பார்க்கிறார்.

பணக்கார யோகத்தைப் பெறுவீர்கள். பொருளாதா சூழல் அபரிமிதமாக உயரும். எது எல்லாம் தேவை என்று நினைக்கிறீர்களோ அவை எல்லாம் கிடைக்கும் காலகட்டம். சொந்த நட்சத்திரத்தில் இருந்து சொந்த வீட்டை பார்ப்பதால் குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. இடம் வாங்குவது, வீடு கட்டுவது, விவசாயம் செழிப்பது, கால்நடைகளால் அபரிமிதமான லாபம் என்று செழிப்பாக இருக்கும்.

ராகுவுடைய நட்சத்திரத்தில் குரு வரும்போது குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. அர்த்தாஷ்மடத்தில் சனி, 9 ஆம் இடத்தில் கேது இருக்கிறார். நிறைய பேர் கஷ்டப்பட்டு, அதில் வெற்றி பெறுவீர்கள். விடியற்காலையில் எழுவது நல்லது. ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடுவது அற்புத பலன்களைத் தரும்.

தாயார் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. உபஜெய ஸ்தானத்தில் குரு பார்வை படுவதால் எடுக்கும் காரியங்களை அன்றைக்கு அன்றே செய்து முடிப்பது நல்லது. பொறுமை, எளிமை, கடமையை கடைப்பிடிப்பது நல்லது. இதை செய்தாலே குரு பகவானின் பூரண அருளைப் பெறலாம். பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்குச் சென்று தொண்டாற்றுவது நல்லது. குரு மந்திரத்தை சொல்லி வருவது நல்லது.

காதல் வாழ்க்கை கைகொடுக்கும். காலம் தாழ்த்தாமல் திருமணத்தை முடிப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். குழந்தைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். கலைஞர்களுக்கு உழைப்புக்கான ஊதியம், அங்கீகாரம் கிடைக்கும். பள்ளி பருவத்தில் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு நண்பர்கள் மூலம் கெடுதல் வருவதற்கான வாய்ப்புள்ளது.

காதல் வயப்படக் கூடிய அமைப்பு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்யும் வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். குரு பகவானோடு சேர்ந்து பைரவருக்கும் விளக்கு போடுவது தேவையில்லாத உறவுகள் வந்து சேருவதை தடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+