குருப்பெயர்ச்சி: கடக ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலை, வருமானத்தில் முன்னேற்றம்!
Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. குருவின் இந்த பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்ன பலன்கள் எல்லாம் கிடைக்கப் போகிறது என விரிவாகப் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசியினருக்கு முன்னேற்றத்தையும், உயர்வையும் உறுதியாக வழங்கக் கூடியதாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
குழப்பங்கள் தீரும்
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் விலகி அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையுடன் புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் அதிக கண்டிப்பைத் தவிர்த்து அனுசரணையுடன் நடந்து கொள்வது நல்லது. உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
தொழிலில் வளர்ச்சி
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணப்படும். நேர்மையும் முழு கவனமும் இருந்தால் லாபமும் முன்னேற்றமும் தொடர்ந்து கிடைக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் ஆவணங்கள் மற்றும் கையெழுத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம்.
புதிய வாய்ப்பு
அரசியல் துறையினர்கள் யாருக்கும் அவசர வாக்குறுதிகள் வழங்காமல் இருப்பது நல்லது. மேலிடத்துடன் தேவையற்ற கருத்து மோதல்களைத் தவிர்க்கவும். கலைத்துறை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்கள் தங்களது திறமைக்கு ஏற்ற புதிய வாய்ப்புகளையும் பாராட்டுகளையும் பெறுவார்கள். மாணவர்கள் நண்பர்கள் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
தேவையற்ற சகவாசங்களைத் தவிர்த்து படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பதைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. கழுத்து, மூட்டு மற்றும் பல் தொடர்பான சிறிய உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். அனுமன் வழிபாடு மேற்கொள்வது மன உறுதியையும், வெற்றியையும், குடும்ப மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications