குருப்பெயர்ச்சி: கன்னி ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான்.. அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம்
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், கன்னி ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது கன்னி ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு இதுவரை 10 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வந்து மிகப்பெரிய நல்ல பலன்களைக் கொடுக்கப் போகிறார். 10 இல் குரு இருந்ததால் நிறைய பேருக்கு வேலையில் பிரச்சனைகள் இருந்திருக்கும். தொழில் ரீதியான முடிவுகளில் பல்வேறு பிரச்சனைகள், சிக்கலை சந்தித்து வந்திருப்பீர்கள். எந்த நல்ல காரியங்களை செய்யப் போனாலும் தடை, ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும்.
வேலை
வரும் குருப்பெயர்ச்சியால் இந்த அனைத்து விதமான பிரச்சனைகளும் பரிபூரணமாக விலகப் போகிறது. குரு பகவான் உங்கள் லாப ஸ்தானத்திற்குச் செல்வதால் வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். வேலையை விட்டு விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வேலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்.
புதிய வேலைவாய்ப்பு
அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுகள் கிடைக்கும் யோகம் உண்டு. நீண்டநாட்களாக குடும்பத்தில் எந்தவொரு சுப காரியங்களும் நடக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் நடக்கும். குரு பகவான் பெயர்ச்சி ஆன பின்னர் சுப செய்தி உங்களுக்கு வந்து சேரும்.
குரு பார்வை
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிய பிள்ளைகள் இனி திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் சூழல் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி திருமணம் கைகூடி வரும். உயர்கல்வி படிப்பதில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும்.
வழிபாடு
உங்கள் பேச்சு இனிமையாக மாறும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு, மரியாதை ஏற்படும். புத்திர யோகம் உண்டாகும். நண்பர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நல்ல ஒற்றுமை ஏற்படும். தொழில் வளர்ச்சி அற்புதமாக இருக்கும். தொழிலுக்கு நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications