குருப்பெயர்ச்சி பலன் 2026: விருச்சிக ராசிக்கு வசந்தமான காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாக போகுது
Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி விருச்சிகம் வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து விருச்சிகம் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் விருச்சிகத்திற்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.
இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சி அருமையான குருப்பெயர்ச்சியாக இருக்கும். 5 ஆம் இடத்தில் உச்சமாகும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தீர்வு கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வசந்தம் வரும்
வெளிமாநிலத்தில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். சாதிக்க முடியாத அமைப்புகள் மாறும். காதலன், காதலியிடம் பேசும் அமைப்பு உண்டாகும். வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் இருக்கும் விருச்சிக ராசியினருக்கு வசந்தம் வரக்கூடிய அற்புதமான குருப்பெயர்ச்சியாக இருக்கும். வருமானம் பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை, பொருளாதாரம், தொழில் போன்றவை நன்றாக இருக்கும்.
பாக்கியத்தில் குரு
அந்தஸ்து, கெளரவம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும், பாக்கிய ஸ்தானத்தில் வரும் குரு எல்லாவிதமான கெளரவத்தையும் கொடுக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் நல்லவை நடக்கும். எதிலும் நல்லவை நடப்பது முகத்திலேயே தெரியும். முயற்சிகள் பலிக்கும். எதிரிகள் ஒதுங்கிப் போகும் அமைப்பு உள்ளது.
திருமண யோகம்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகும் யோகம் உண்டாகும். ஆண் வாரிசுகள் கிடைப்பதற்கான பாக்கியம் உண்டு. ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்து வந்த மன கலக்கங்கள் தீரும். ஆரோக்கியம் சார்ந்த குறைபாடுகள் தீரும். 1, 3, 5, 9 ஆகிய பாவங்கள் வலிமைப்படுத்தக் கூடிய குருப்பெயர்ச்சியாக இருக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும்.
நன்மைகள்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். முக்கியமான முடிவுகளை சிந்தித்து, ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுத்து அதில் வெற்றி பெறும் யோகம் உண்டு. 100க்கு 80 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications