குருப்பெயர்ச்சி: "காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது".. மேஷ ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு
குருப்பெயர்ச்சி: இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ நட்சத்திரக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்துக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஒரு பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறார். மூன்றாவது இடம் என்பது உபஜெய ஸ்தானம். உபஜெயம் என்றால் வெற்றியடைவதற்கான திட்டம் போடுவீர்கள். இடமாற்றத்தைக் கண்டிப்பாக கொடுக்கும். மேஷ ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும்.
பாலகல்வி கற்கக்கூடிய குழந்தைகளுக்கு நல்ல அற்புதமான காலகட்டம். புதிய விஷயங்களை கற்கக்கூடிய யோகம் உண்டாகும். அதற்கான எண்ணம் வரும். ஆன்லைனில் சர்டிபிகேஷன் கோர்ஸ் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். மீடியாவில் தோன்றி பெரிய அளவுக்கு சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றத்துடன் சேர்ந்த பதவி உயர்வு கிடைக்கும்.
ஆன்லைனில் புதிய தொழில் கற்கக்கூடிய, புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரக்கூடிய பிராப்தம் உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குருவின் பார்வை மூலம் துலாமின் மீது விழுவதால் வரக்கூடிய பெண் அல்லது ஆண் துலாம், மிதுனம், கும்பத்தில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஏழாம் இடத்தில் குருவின் பார்வை, 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்கள் சம்பந்தப்பட்ட சொத்துகள் வந்து சேரும். கோயிலுக்குச் சென்று உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிராப்தம் உண்டாகும்.
லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் பத்து மடங்கு லாபம் உண்டாகும். குருவின் பார்வை லாபத்தில் இருப்பதால் முதலீடு போட்ட இடத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பல்வேறு நற்பலன்களை குரு அள்ளித் தந்தாலும், மார்புப் பகுதிக்கு மேல் கழுத்துக்கு கீழ் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குருப்பெயர்ச்சியில் பெண், ஆண் இருபாலருக்கும் நிறைய வெற்றி வாய்ப்புகள், சந்தோஷம் அதிக அளவில் கிடைக்கும். 100க்கு 90 சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் 75 சதவீதம் முன்னேற்றம் இருக்கும். 3 பிரம்மச்சாரிகளை வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவது நல்ல பலன்களைத் தரும்.
3 ஆம் இடத்தில் புதன் வீட்டில் குரு இருப்பதால் பாலகல்வி கற்கக்கூடிய அதாவது 3 ஆம் வகுப்பு கீழ் உள்ள மாணவர்களை பிரம்மச்சாரிகளை அழைத்து வந்து சாப்பாடு போட்டு, மஞ்சள் வஸ்திரத்தை தானமாக கொடுத்து, மஞ்சள் நிற இனிப்புகள் வழங்க வேண்டும். இதன் மூலம் பால ரூபத்தில் இருக்கக்கூடிய குரு உங்களுக்கு அனைத்து விதமான செளபாக்கியங்களையும் அள்ளித் தருவார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications