குருப்பெயர்ச்சி: கஷ்டங்களில் இருந்து கன்னி ராசிக்கு விடுதலை.. பணத்தை கொட்டிக் கொடுக்க போகும் குரு
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் முதலில் வேலையை கவனமாக இருக்க வேண்டும். 10 ஆம் இடத்தில் குரு அமருவதால் இருக்கும் வேலையில் மாற்றம் தருவார். குரு அமர்ந்திருக்கும் இடம் காலபுருஷனுக்கு 3 ஆம் வீடு. கன்னி ராசி, லக்னத்தில் பிறக்கக்கூடிய சாஃப்ட்வேர் ஊழியர்கள், மீடியாவில் இருப்பவர்கள், டிராவல் தொடர்பான வேலையில் இருப்பவர்கள், ஆடிட்டர்களுக்கு வேலை மாறும்.
குருவின் பார்வை பலத்தின் மூலமாக 2, 4, 6க்குரிய பாவங்களை செயல்படுத்துவார். 2 ஆம் இடம் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கு குரு பார்வை உள்ளது. 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்துக்கும், 6 ஆம் இடம் வெற்றி ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் ஒரு திசையில் இருந்து பிரச்சனை வந்தாலும் 3 திசையில் இருந்து யோகம், பணம் வரும்.
குரு பார்க்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. குடும்பத்தில் அந்நியோன்யம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கன்னிக்கு 7 ஆம் இடத்தில் சனி அமருவதால் பிராத்தியார் ஒருவர் வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தேவையில்லாத ஆட்களை வீட்டுக்குள் விடாமல் இருப்பது நல்லது. கன்னி ராசியினருக்கு பொதுவாக நன்றாக உள்ளது. வேலையில் வரும் மாற்றத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேறு வேலையை மாற்றி 2 மாதங்களுக்குப் பின்னர் அனைவரிடமும் சொல்வது நல்லது.
ராசி, லக்னத்தில் இருந்து கேது கிளம்பி விரைய ஸ்தானத்துக்கு போவது என்பது பெரிய அதிர்ஷ்டமாகும். கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஒரு வருடமாக இருள் சூழ்ந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருப்பீர்கள். தேவையில்லாத சங்கடம், மன அழுத்தம், பெரியவர்களுக்கு புற்றுநோய், தற்கொலை எண்ணங்கள், மருத்துவ சிகிச்சை என பல்வேறு விஷயங்களில் சிக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். அதில் இருந்தெல்லாம் விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
சந்தோஷ ரீதியாக 100க்கு 80 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 95 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- வேத பாட சாலைகளில் உங்களால் ஆன படிப்பிற்குரிய புத்தகம், நோட்டு தானமாக வழங்குவது அமோகமான பலன்களைத் தரும். அல்லது வேத பாட சாலையில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பென்சில், ஒரு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தாலே நல்ல மகிழ்ச்சியைத் தரும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications