குருப்பெயர்ச்சி: கும்பம் ராசிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. வேற லெவல் யோகம்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம் ராசி, லக்னத்தில் உள்ள ஊடகம், கலைத்துறையை சார்ந்தவர்கள் புதிய உச்சத்துக்கு செல்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குரு பார்வை இருப்பதால் இறங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் எல்லாவற்றிலும் மிகப்பெரிய லாபம் கிடைக்க போகிறது. அதிர்ஷ்டம் கொட்டும்.
சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். திருமணம் தடை இருப்போருக்கு அது விலகி திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரிய அந்தஸ்தில் உள்ள குடும்பத்தில் இருந்து வரண் அமையும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் முடியும். நீண்ட காலமாக திட்டமிட்ட கோயில் பயணங்கள் இந்த காலத்தில் நிறைவேறும்.
தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக தொழில் தொடங்க நினைப்போருக்கு இது சரியான காலம். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனையில் இருப்போருக்கு இந்த காலத்தில் குழந்தை பேறு உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
குடும்பத்தில் உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டி ஆகியோருடன் நீண்ட காலமாக இருந்து வரும் பூர்விக பிரச்னைக்கு இந்த காலத்தில் தீர்வு கிடைக்கும். குடும்ப்த்தில் ஒற்றுமையால் மகிழ்ச்சி பொங்கும். கடன் சுமை நீங்கி பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். புதிதாக வண்டி, வாகனம் மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய, ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
ஜென்மத்தில் இருந்து சனி செல்வது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். கணவன் - மனைவி உறவில் மட்டும் சின்ன சின்ன சண்டைகள் அவ்வபோது வந்து செல்லும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மே மாதம் இரண்டாம் வாரத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ராகுவால் சின்ன சின்ன சங்கடங்கள் வந்து செல்லும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? :- ராகுவால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க கும்பகோணத்தில் உள்ள வியாசராஜர் பிருந்தாவனத்துக்கு சென்று வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்வதால் நன்மை உண்டாகும்.












Click it and Unblock the Notifications