குருப்பெயர்ச்சி: உச்சத்தில் குரு ரிஷபத்துக்கு யோகமோ யோகம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்
குருப்பெயர்ச்சி: இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு லக்னம் அல்லது ராசியில் இருந்து படாதபாடு பட்டிருப்பார்கள். நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். ஆரோக்கியத்தில் பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். நிறைய கஷ்டங்கள், சங்கடங்கள் இருந்திருக்கும். இரண்டாம் இடம் எனும் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கு குரு போகிறார். இதனால் திரிகோண ஸ்தானங்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
இரண்டாம் இடம், 6 ஆம் இடம், 10 ஆம் இடம் ஆகிய இடங்களில் குரு வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார். தொழில், வேலை, அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரம், விடாப்பிடிவாதமாக ஒரு காரியத்தை நின்று சாதிக்கும் காலகட்டமாக உங்களுக்கு இனி இருக்கும். உத்தியோகம், வேலை, வியாபாரம் நன்றாக இருக்கும். கையிருப்பு பணம் அதிகமாக இருக்கும்.
நகைகள் வாங்கக்கூடிய அருமையான காலகட்டமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு முகத்தில் பொலிவு அதிகரிக்கும். பார்ப்பவர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள். பொருளாதாரத்தில் அதிக அளவிலான நன்மைகள் கொடுக்கும். அதேசமயம், 6 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் கடன், நோய், தேவையில்லாத பிரச்சனைகள் தீரும்.
மனைவிக்கு ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் சரியாகும். 8 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் திடீரென உங்களை யாராவது திருப்பதி, அயோத்தியா, ஸ்ரீரங்கம் கூட்டிச் செல்லும் யோகம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். சில பேருக்கு வெளியூரில் கல்விக்கான சீட் கிடைக்கும். தொழில், வேலை, அந்தஸ்தும் நன்றாக இருப்பதால் யோக காலமாக இருக்கும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்:- குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் இணக்கமாக இருப்பதை பார்த்துக் கொள்வது நல்லது. நினைத்த காரியங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷத்தின் அடிப்படையில் 100க்கு 80 சதவீதம் யோக காலமாக இருக்கும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் 90 சதவீதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டு வஸ்திர தானம் கொடுத்தும், ஆசிர்வாதம் வாங்குவது உங்கள் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும். வியாழக்கிழமை இதனை செய்வது நல்லது. பச்சை, மஞ்சள் வஸ்திர தானமாக கொடுப்பது அருமையான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications