குருப்பெயர்ச்சி: அஷ்டம சனியில் சிக்கும் சிம்மம்.. கை கொடுக்கும் குரு.. இனி அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்மம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். அஷ்டசனி வரப் போகிறது. ராசி, லக்னத்திற்கு கேது வரப் போகிறது. இவையெல்லாம் படுமோசமானது. அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்கப் போகிறவர்கள் சிம்ம ராசியினர்தான். ஆனால், அந்த ஒன்றரை வருடத்தில் குரு அமரும் இடம் லாப ஸ்தானம் என்பதால், அதாவது மிதுனத்தில் உட்காருவதால் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

Guru peyarchi Simmam

வீட்டில் பல்வேறு விதமான பிரச்சனை, ஆரோக்கியத்தில் பிரச்சனை, பெரியவர்களின் இழப்பு போன்ற பல்வேறு இழப்புகளை கொடுத்தாலும், லாபத்தையும், நல்ல நட்பாகவும், உறுதுணையாகவும் இருக்கக்கூடிய நண்பர்களையும், அபாரமான சந்தோஷத்தையும் குடும்பத்தின் மூலமாக கொடுப்பார். குரு லாப ஸ்தானத்தில் உட்காருவதால் குழந்தைகள் மூலமாக அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேறு இடம், மொழி தெரியாத ஊர்களுக்கு சென்று உயரிய பதவியில் இருக்கும் யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் குரு அமருவதால் புதிதாக ஒரு இடம் வாங்கி பத்திரங்கள் வீட்டுக்கு வரும். லாபங்கள் கொடுக்கும். மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு கேது வருவதால் வீட்டில் இருக்கும் மூத்த பெண்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆன்மிகத்தில் நாட்டம் 10 மடங்கு உயரும். கேது ஆன்மீகத்துக்குரிய கிரகம். சந்நியாசிகளைப் பார்த்து, சித்தர்களைப் பார்த்து மனமுருகி நீங்கி வேண்டுதல்களை வைக்கும்போது அவை கட்டாயம் நிறைவேறும். குரு பார்வையின் பலம் துலாமின் மேல் விழுவதால் நல்ல மனசு, நல்ல எண்ணங்கள் உண்டாகும். அக்கம்பக்கத்து வீட்டாரின் நட்பு, இளைய சகோதரன், சகோதரிகள் மூலம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

நல்ல மனிதர்களாக மாறுவீர்கள். குழந்தை பிராப்தம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். எங்கு சென்றாலும் ராஜமரியாதை கிடைக்கும். காலபுருஷனுக்கு 9 ஆம் வீடு தனுசு. தனுசு மீது 7 ஆம் பார்வையாக குரு மிதுனத்தில் இருந்து பார்ப்பதால் சிம்மத்துக்கு பஞ்சம ஸ்தானம். இது மிகப்பெரிய அதிர்ஷ்டம். 7 ஆம் இடத்துக்கு பார்வை பலம் இருப்பதால் நிறைய பேருக்கு மறுமணம் நடக்கும்.

ராகு அமர்ந்திருப்பதால் விவாகரத்தானவர்கள், ஒரு நாள் கூட வாழாதவர்கள் திருமணம் ஆகும். பணம் காசு செலவு செய்து சில விஷயங்களை முடிக்கும் சூழல் உண்டாகும். அடுத்த ஓராண்டு பொன்னான காலமாக இருக்கும். லாபத்தில் குரு அமர்ந்திருப்பதால் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். பெரிய பட்டங்கள், பதவிகள், டபுள் புரோமோஷன் கிடைக்கும். சித்தர்களை சரியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். சனிப்பெயர்ச்சியால் இரண்டரை வருடம் நன்றாக இல்லை. அதிலும் குரு உங்களை ஒரு வருடம் காப்பாற்றும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டாகும்.

சந்தோஷ ரீதியாக 100க்கு 75 சதவீதமும், பொருளாதாரத்தில் 90 சதவீதமான ஏற்றம் உண்டாகும். திருப்தியாக சந்தோஷமாக இருக்கும் காலமாக இருக்கும். மாணவ, மாணவிகளுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். சென்டம் வாங்கக்கூடிய யோகம், எதிர்பாராத மெரிட்டில் சீட் கிடைக்கும். மருத்துவர் பட்டம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பிடித்த துறை கிடைக்கும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம்:- எந்தப் பிரச்சனைகளிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் தூண்டுதலால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்

செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- சித்தர்கள் மனமாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+