குருப்பெயர்ச்சி: காசு பணம் துட்டு மணி மணி.. குருவின் பார்வையால் விருச்சிகத்துக்கு அடிச்ச லாட்டரி
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு சுபக் கிரகம் இவ்வளவு நாள் 7 ஆம் இடத்தில் அமர்ந்து பார்வை பலத்தால் உங்கள் ராசி, லக்னத்திற்கு வெற்றியைக் கொடுத்து வந்தார். ஆனால், இப்போது அஷ்டமத்தில் குரு அமருவதால் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகிறீர்கள். குழந்தைகள் உங்களை எதிர்க்கும் சூழல் உருவாகும். குழந்தைகளால் அவதி ஏற்படும். குழந்தைகளால் திடீர் செலவு ஏற்படும்.
பத்திரங்கள் பதிவு, வீடு, நிலம் புதிதாக வாங்கும்போது தாய் பத்திரத்தை சரியாகப் பார்த்துக் கொள்வது நல்லது. செவ்வாய் வக்கிரமாக மிதுனத்தில் இருப்பதால் கோச்சார பலன்கள் பிரகாரம் தாய் பத்திரம் மூலம் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. அடிவயிறு, உஷ்ணம், கழிவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக சிறிய அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு உள்ளது. அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும்.
8 ஆம் இடத்தில் இருக்கும் குரு அவருடைய பார்வை பலத்தை உங்களுடைய விரைய ஸ்தானத்தின் மீது செலுத்துகிறார். இனி நற்செய்தி உண்டாகும். காப்பீடு மூலமாக பணம் வரும். பெரிய மனிதர்கள் உங்களுக்கு உதவும் சூழல் உண்டாகும். உயில், சொத்துகள், திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாக பண வரவு உண்டாகும். எதிர்பாராமல் வீட்டை விற்று பெரிய கடன்களை முடித்து நிம்மதி பெரும் சூழல் உண்டாகும்.
கிரெடிட் கார்டுகளை அடைப்பீர்கள். இனிமேல் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். நிம்மதியாக தூங்குவீர்கள். 2 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் குடும்பம் நன்றாக இருக்கும். இளைய சகோதரன், சகோதரிகளை கொஞ்சம் தூரமாக வைத்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் நட்பு வைத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனமாக வைத்திருக்க வேண்டும்.
2 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள், நல்ல விஷயங்கள் நடக்கும். பணத்துக்கு பிரச்சனையே இருக்காது. பணவரவு உண்டாகும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கும். சொல் வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். கெளரமான பேச்சுக்களை மட்டுமே பேசும் அம்சங்கள் ஏற்படும்.
4 ஆம் இடத்துக்கும் குருவின் பார்வை இருப்பதால் பிரம்மாண்டமான வீடு கட்டும் யோகம் உண்டாகும். அதாள பாதாளத்தில் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும். அதன் பக்கத்தில் வீடு அமையும். மயானம் இருக்கக்கூடிய பகுதியில் வீடு கிடைக்கும். 3 கிலோ மீட்டர் மசூதி இருக்கும் பகுதியில் வீடு அமையும். 3 கிலோ மீட்டருக்கு உள்ளேயே சாயிபாபா அல்லது ஜீவசமாதி இருக்கக்கூடிய வீடு, நிலபுலன்கள் அமைக்கக்கூடிய வீடு, நிலபுலன்கள், வாகனம் அமையும். 4 ஆம் இடத்தில் ராகு அமர்ந்துள்ளதால் பார்வை பலத்தை குரு கொடுப்பதால் அருமையான காலகட்டமாக இருக்கும்.
சந்தோஷ ரீதியாக 100க்கு 75 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 90 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்:- வீடு, நிலம் வாங்கும்போது தாய் பத்திரம் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதர, சகோதரிகளிடம் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்ல பலன்களைத் தரும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- அஷ்டமத்தில் குரு இருக்கும்போது மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு ஒரு வேளைக்கான சாப்பாடு வியாழக்கிழமை மதியம் அளிப்பது நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் உண்டாக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications