குருப்பெயர்ச்சி: அனுசம் நட்சத்திரத்துக்கு கொட்டிக் கொடுக்கும் குரு.. திடீர் அதிர்ஷ்டம் பணம் கொட்டும்
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியால் மூலம் நட்சத்திரக்காரர்கள் ராஜயோகம் பெறப் போகின்றனர். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணப் போகிறார்கள். இந்த குருப்பெயர்ச்சியில் அனுஷம் நட்சத்திரத்தினர், விருச்சிக ராசியினருக்கு என்னென்ன விதமான நற்பலன்களை அனுபவிப்பார்கள். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் இருந்து புதன் வீடான மிதுனத்தின் வீட்டில் மிருகசீஷம் 3 ஆம் பாதத்துக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அன்று முதல் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வரை மிதுன ராசியில் இருக்கப் போகிறார். அதிசாரமாக அக்டோபர் மாதத்தில் மிதுனத்தில் இருந்து இறங்கி கடகத்துக்கு மீண்டும் வருகிறார்.

பிறகு, அங்கு வக்கிரமாகி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மீண்டும் மிதுனத்தை நோக்கி தன்னுடைய பெயர்ச்சியை ஆரம்பிக்கிறார். மீண்டும் கடகத்துக்கு வருவார். இந்த குருப்பெயர்ச்சியினால் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அனுஷம், விருச்சிகம் ராசி: 2 ஆம் இடத்துக்கு குருவின் பார்வை கிடைக்கப் போகிறது. பின்னர், 4 ஆம் இடம், 8 ஆம் இடத்திலும் குரு பார்வை விழுகிறது. அனுஷம் என்பது சனி பகவானுடைய ஆகச்சிறந்த ஆளுமை பொருந்திய நட்சத்திரம். செல்வம் பெருக அனுஷம் நட்சத்திரத்தில் வழிபாடு செய்வது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் அவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் துணை இருக்க வேண்டும். இல்லையெனில் குலதெய்வ தோஷம் இருந்தாலும் பிறப்பார்கள்.
அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை பட்ட கடன்கள், அவமானங்கள், வேதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அந்த அளவுக்கு பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மகத்தான காலகட்டமாக இருக்கும். 2, 4, 8 ஆம் இடங்களுக்கு குரு பார்வை இருப்பதால் பொன்னான காலமாக இருக்கும். எவை எல்லாம் வேண்டும் என்று நினைத்தீர்களோ அவை எல்லாம் கிடைக்கும்.
4 ஆம் இடத்து சனி நிறைய பிரச்சனைகளை கொடுத்திருப்பார். தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள் என பலரையும் இழந்திருப்பீர்கள். குருவின் பலம் பெரிதாக இல்லாததால் நிறைய சவால்களை சந்தித்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் இனி விடிவு காலம் பிறக்கப் போகிறது. இறைவனுடைய ஒளியை உணரப் போகும் நேரமாக இருக்கும்.
8 ஆம் இடம் இயங்கப் போகிறது. திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். காப்பீடு பணம் வந்து சேரும். தசா புத்திகள் சரியில்லை எனில் சிறு சிறு விபத்துகள் வருவதற்கான அபாயம் உண்டு. ஆனால் ஆயுளுக்கு பங்கம் இல்லை. பிரச்சனைகள் வருவது போல இருந்தாலும் பிரச்சனைகள் நடக்காது. ஆத்ம அழகு அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
2 ஆம் இடம் அதிகரிக்கப் போகுது. குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் அனைத்தும் தீரும். பிரச்சனை என்று ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்சனைகளும் தவிடு பொடியாகும். குடும்பத்தில் வருமானம் உயரும். குடும்பம் சேரும் யோகம் உண்டு. பிரச்சனை, கடன் என்று தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இல்லத்தரசிகளுக்கு மிகச்சிறந்த பொற்காலமாக இருக்கும்.
குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் பாக்கியங்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். உங்களை அனைவரும் புரிந்து கொள்வார்கள். தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வருமானம் அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரப் போகிறது. ஆன்மிக விஷயங்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும்.
சனி குருவின் வீட்டில் அமர்ந்துள்ளது மற்றும் குருவின் பார்வை 2 ஆம் வீட்டில் விழுவது எதிர்மறையான ஆற்றல்கள் எல்லாம் தவிடு பொடியாகும். 8 ஆம் இடம் என்றால் ரகசியங்கள் வெளிப்படக்கூடிய இடம். உங்களுடைய மாமியார், மாமனார் வீட்டின் அனுக்கிரகங்கள் கிடைக்கும். அவர்களைப் பற்றிய விஷயங்கள் வெளிப்படும். அருமையான காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மன நிம்மதி, மன நிறைவு உண்டாகும். எதைத் தேடுகிறீர்களோ அவை நீங்கள் உழைக்காமல், சலிக்காமல் உங்களுக்கு கிடைக்கும். தேடியவை அனைத்தும் உங்களை நோக்கி வரும். படிப்பில் தடைபட்ட குழந்தைகளுக்கு எல்லாம் நல்ல படிப்பு உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தினர் உள்ள வீட்டில் உள்ளவர்கள் ஜோதிடம் சம்பந்தப்பட்டதை பேசுவதை காது கொடுத்து கேட்பீர்கள்.
ஜோதிடம் சார்ந்த படிப்பு என்பதை படிக்கப் போகிறீர்கள். மறைபொருள் ஞானம் கிடைக்கும். கால கணிதத்தை புரிந்து கொள்ளப் போகிறீர்கள். எவை எல்லாம் உங்கள் தலையை போட்டி உருட்டிக் கொண்டிருந்ததோ அந்த விஷயங்கள் எல்லாம் நிவர்த்தி உண்டாகப் போகிறது. சனி 5 இல் உட்காருவதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. ஆத்ம பலம் அதிகரிக்கும். நட்சத்திர நாதன் வலுவாக இருப்பதால் நீங்களும் வலுவாக இருக்கப் போகிறீர்கள்.
சொல் வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும், பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. 30 - 50 வயதினருக்கு வாக்கு வன்மை அதிக்கப் போகிறது. ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள், வாத்தியர்கள், ஜோதிடர்கள், பாடகர்கள், வாக்கால் வார்த்தையால் குரலால் பிழைக்கக்கூடிய தொழில் செய்பவர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
சிந்தனையில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. இரவு நேரத்தில் வாகனத்தை ஓட்டும்போது பார்த்து ஓட்ட வேண்டும்.
வழிபாடு
முருகனை வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். அய்யனார், கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களை வழிபடுவது நல்ல அனுகூலமான பலன்களைத் தரும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications