கடக ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் குரு.. தங்கத்தை குவிக்கும் யோகம்.. தொட்டது துலங்கும்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றம். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசியினர் அஷ்டம சனியால் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். தற்போது லாப ஸ்தானத்தில் சனி போவதால் பல்வேறு பாதிப்புகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். நிறைய புதிய விஷயங்களை செய்யத் தொடங்குவீர்கள். விரைய ஸ்தானத்தில் குரு போகிறார். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. கிரெடிட் கார்டுகள் கடன்களை அடைப்பீர்கள். அடகு வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். கடன்களை எல்லாம் முடிப்பீர்கள்.
குரு முழு சுபக்கிரகம் என்பதால் வீட்டில் நிறைய சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தைகள் படிப்புக்காக நிறைய செலவுகளைச் செய்து பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்ப்பீர்கள். மருத்துவத்துக்காக நிறைய கஷ்டப்படுபவர்கள் எல்லாம் அந்த நிலையில் இருந்து விடுதலை பெறுவார்கள். பேக் பெயின், சதை படிப்பு போன்றவை ஏற்படும். கால், பாதம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
4 ஆம் இடத்தை குரு செயல்படுத்தவுள்ளார். 4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். வீடுகளில் ஆடம்பரத் தேவைகளைச் செய்து முடிப்பீர்கள். படிப்புகளில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். மாணவ, மாணவிகளுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். சுக்கிரனுடைய இடத்துக்கு குரு இணைவதால், மீடியா, அழகு தொடர்பான படிப்புகள், வண்டி வாகனம் தொடர்பான தொழில், நிதி, தங்கம் தொடர்பான படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தன பிராப்தம் அதிகரிக்கும்
முதலீடு
கடக ராசியினர் தங்கத்தில் முதலீடு செய்வதால் அபரிமிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். பணம் சேமிப்பதற்கான ஏதாவதொரு பொருளை தென்மேற்குப் பகுதியில் வாங்கி வைப்பது நல்லது. அதன் மேல் நரசிம்மர் படத்தை வைப்பது, மஞ்சள் பட்டு வைப்பது அபரிமிதமான பண வரவைக் கொடுக்கும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். அரை கிராம், ஒரு பொட்டு தங்கத்தை வைப்பது மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
தொழில்
உற்பத்தி நிறுவனம், கல்வி நிறுவனம் தொடங்குவது நன்மை பயக்கும். எந்தவொரு நிறுவனத்தை நீங்கள் ஆரம்பித்தாலும் பத்து பேர் உங்களைச் சேர்ந்தவராக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் அருமையான நல்ல பலன்களைத் தரும்.
கோயில், பரிகாரம்
12 ஆம் இடத்தில் விரைய ஸ்தானத்தில் குரு இணைவதால் ராகவேந்திரர் கோயிலுக்குச் செல்வது நன்மை பயக்கும். ஜீவசமாதி அடைந்த சன்னியாசிகள், சித்தர்கள், ஞானிகள் மடங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். பெரியவர்களுக்கு செருப்பு தானம் செய்வது நல்லது. வசிக்கக்கூடிய இடத்தில் குளிர் அதிகம் இருந்தால் போர்வை கொடுப்பது அதிர்ஷ்டத்தை தரும். வெயில் அதிகமாக இருந்தால் குடை கொடுக்கலாம்.
மதிப்பெண்
சந்தோஷத்தின் அடிப்படையில் 75 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 85 சதவீதம் நன்மை பயக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications