சொல்லி அடிக்கும் மிதுன ராசியினர்.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. பண மழை கொட்டப் போகுது
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றம். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு குரு ராசி, லக்கினத்தில் அமருவதால் இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். கலைகளில் இருக்கும் நபர்கள், மீடியா துறைகளில் இருப்பவர்கள், படிப்புத் துறை, ஆடிட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன.
நரம்புகள் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் இதயம் சார்ந்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வீட்டில் நடக்கும் நல்ல காரியங்கள் உங்களை முன்னிறுத்திச் செய்வீர்கள். குருவின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் விழுவதால் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும்.
மே மாதத்துக்குப் பிறகு உங்களுக்க குழந்தை பாக்கியம் உண்டாகும். அழகான பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. அறிவுத் திறன், புத்திசாலித்தனம் அதிகரிக்கும். போன ஜென்மத்தில் செய்த புண்ணியங்களால் வீடு, நிலங்களை விற்று பெரிய தொகை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் அனைத்தும் நிறைவேறும். விவாகரத்துப் பெற்றவர்களுக்கு மறுமணம் நடக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு விமானத்தில் செல்லும் யோகம் உண்டாகும். பெரிய பெரிய இடங்களுக்குச் சென்று வருவீர்கள். முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். தெய்வ காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள், பணத்துக்கு, அறிவுக்குப் பஞ்சம் இருக்காது. தேவையான பொருள்கள் அனைத்தும் கிடைக்கம். இதுபோன்ற சூப்பரான காலகட்டம் அமையவே அமையாது. அந்த அளவுக்கு யோகமான காலகட்டம். சுப காரியங்களுக்காக அதிகளவில் செலவு செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
புத்திக்கூர்மை பொதுவாகவே மிதுன ராசியினருக்கு அதிகமாக இருக்கும். கணக்குப் போடுவதில் வல்லவர்களாகவும், பேசியே காரியத்தை சாதிக்க கூடியவர்களாகவும் இருப்பீர்கள். இந்த தன்மை பெரிய வெற்றியைக் கொடுக்கும். பெண்களுக்கு உயர்கல்வியில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும். வெளியூர், வெளிநாட்டுக்கு சென்ற படிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தொழில், வேலை ரீதியாக நல்ல விஷயங்கள் நடக்கும். சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் போடாமல் செய்யக்கூடிய தொழில்களை செய்யலாம். கமிஷன் புரோக்கரேஜ், கைமாற்றி விடும் தொழில், கன்சல்டன்ஸ் போன்றவை அமைத்தால் நன்மை பயக்கும். மீடியா துறை சார்ந்த அனைத்து தொழில்களும் வெற்றியைத் தரும். பூஜா சாமான் ஸ்டோர், கிளீனிக் ஆரம்பிப்பது போன்றவை செய்யலாம்.
வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்
கொழுப்பு சத்து அதிகமாகும் என்பதால் பெருமாள் கோயிலில் தேனை அபிஷேகத்துக்கு தானமாக கொடுப்பது நல்லது. இது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தரும்.
மதிப்பெண்
சந்தோஷத்தின் அடிப்படையில் 100 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 80 சதவீதம் நன்மை பயக்கும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications