குரு பெயர்ச்சி பலன் 2023 : அஷ்டம குரு..கன்னி ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் மறையும் காலம்
சென்னை: குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மனிதர்கள் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை தரக்கூடியது குரு பெயர்ச்சி. குரு பகவான் மேஷ ராசியில் செவ்வாயின் வீட்டில் அமர்கிறார். சுப கிரகமான குரு போராளியான செவ்வாய் வீட்டில் அமர்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவினால் கஷ்டங்கள் வருமா? கவலைகள் மாறுமா என பார்க்கலாம்.
கன்னி ராசிக்காரர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். குரு பகவான் நன்மையே செய்வார். அஷ்டம ஸ்தானம். தன வருவாய் வரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். குருவின் பார்வை 4வது இடத்தில் பதிகிறது. திருமண தடை விலகும் நல்ல சுப செய்திகள் வரும்.

எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம். வங்கியில் பண இருப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நன்மைகள் நடக்கும். கணவன், மனைவி பிரச்சினை தீரும். நல்ல வேலை கிடைக்கும்.
2ஆமிடமான குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கல்வி நிலையங்களை நடத்துபவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் நல்லது நடக்கும். அப்பாவின் உடல் நலனும் நன்றாக இருக்கும். குரு விசாகத்தில் இருப்பதால் வெளிநாடு கல்வி அமையும்.
8ல் குரு அமர்வதால் பண முடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 3 மாதங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. அதிகம் கடன் வாங்க வேண்டாம். வியாழக்கிழமை திருச்செந்தூர் குடும்பத்துடன் சென்று வர நன்மைகள் நடைபெறும். இது பொது பலன்தான். தசாபுத்தியின் படி சிலருக்கு பலன்கள் மாறுபடும் எனவே கவலைப்பட வேண்டாம்.












Click it and Unblock the Notifications