குரு பெயர்ச்சி பலன் 2023: ராஜா போல வாழ்க்கை.. புகழும் செல்வாக்கும் யாருக்கு தருவார் குரு பகவான்
சென்னை: குரு பகவான் கடக ராசிக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கர்ம ஸ்தான குரு தொழில், வேலையில் மாற்றம் உண்டாகும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குருவின் பார்வை கடக ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பார்வை பலன்: குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குருவின் சஞ்சாரமும், பார்வையையும் பொறுத்து சந்தோஷங்களும் சில சங்கடங்களும் ஏற்படும். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் போதும் இந்த குரு பெயர்ச்சியை சந்தோஷமாக கடந்து விடலாம். குரு வக்ர பெயர்ச்சியால் பணவரவு வரும் கூடவே செலவுகளையும். குடும்பத்தில் குதூகலத்தையும் தரப்போகிறார். வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் வருமானத்தையும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தரப்போகிறார் குரு பகவான்.

பத்தாம் வீடு பொதுவாகவே கர்ம ஸ்தானம். இந்த வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் குரு அமர்வதால் நாம் நம்முடைய வேலையை கவனமாக செய்ய வேண்டும். குரு புதிய பதவியை கௌரவத்தை தேடித்தருவார். குருபகவான் பார்வை தன ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்கள் இந்த குரு பதவியை கொடுப்பார். நிறைய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில் வருமானம் பெருகும். சொத்துக்களை விற்றும் பணம் வரும். சிலருக்கு நெருங்கிய உறவினர்களால் பிரச்சினையும் பிரிவும் ஏற்படும். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வம்பு வழக்குகள் தீரும். தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. என்னதால் வேலை கிடைக்கும் என்றாலும் எந்த வேலையையும் அவசரப்பட்டு விட வேண்டாம். சிலருக்கு வெளிநாடு யோகம் வாய்ப்பு வருது. திருமணம், குழந்தைகளால் சுப செலவு ஏற்படும்.
குரு பகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு மூலம் பணம் வரும்.
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில நிக்கலையே என்று கவலை பட வேண்டாம். பணம் கையில் தங்கும் அளவிற்கு கால நேரம் கூடி வரப்போகிறது.
உடல் நலத்தில் சின்ன பிரச்சினை வந்தாலும் கவனம் நீரிழிவு, இதயநோய் பிரச்சினை உள்ளவர்கள் உடம்பில கவனம். கடக ராசிக்காரர்கள் ஆலய தரிசனம் செய்வதோடு மகான்கள், சித்தர்களை தரிசனம் செய்வது நல்லது. ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பதற்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமைகளில் குருவை வணங்க நன்மைகள் நடக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications