குரு பெயர்ச்சி பலன் 2023: ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு.. வீடு நிறைய தங்கம்.. யாருக்கு தேடி வரும்
சென்னை: பாக்ய ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 4ஆம் தேதியன்று வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வை சூர்யனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வையாலும் வக்ர பயணத்தாலும் என்னென்ன யோகங்களை சிம்ம ராசிக்காரர்கள் அனுபவிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
குரு பகவான் நவ கிரகங்களில் சுபகிரகம். குரு பகவானின் பார்வை பலவித தோஷங்களை நீங்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர நிலையில் அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, எதிரிகளை வீழ்த்துவீர்கள், எதிலும் வெற்றிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடிவரும். வேலையில் அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். வேலையில் இடமாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும்.

குருபகவான் வக்ர கதியில் செல்லும் காலத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். பாக்ய ஸ்தானம் என்பது ஒன்பதாம் இடம். இந்த இடம்
தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார்.
பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை மட்டுமல்லாது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் அந்த இடத்திற்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடைபெறும்.
ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. பூர்வபூண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பண வருமானம் அதிகமாக வந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
மூன்றாம் வீட்டினை குரு பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும்.மன ஆழத்தம் அச்ச உனர்வு ஆகியவை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.புது முயற்சிகள் கை கூடும்.இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும். வியாழக்கிழமை குருபகவானை வழிபாடு செய்வது நல்லது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications