குரு பெயர்ச்சி பலன் 2023: தொழில் குரு..புரமோசன் கிடைக்குமா? வேலைக்கு வேட்டு வைப்பாரா?
சென்னை: குரு பகவான் தர்ம ஸ்தானத்தில் பாக்ய குருவாக பயணம் செய்தவர் பத்தாம் வீட்டில் தொழில் குருவாக அமர்ந்துள்ளார். பத்தில் பயணம் செய்யும் குரு பதவியை பறித்து விடுவாரா? வேலைக்கு வேட்டு வைத்து விடுவாரா என்ற பயம் பலருக்கும் இருக்கும். ஆனால் கர்ம ஸ்தான குரு யாருக்கு புரமோசனை தருவார்? யாருக்கு நல்ல வேலையை தரப்போகிறார் வருமானத்தை அதிகரிக்கப்போகிறார் என்று பார்க்கலாம்.
குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். வரும் 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை மேஷ ராசியில் குரு பயணம் செய்யப்போவதால் பலருக்கும் என்ன பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் என்னென்ன நன்மைகளை செய்யப்போகிறார் என்று தெரிந்து கொள்வோம்.

கடக ராசிக்காரர்களே..உங்களுக்கு வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் நடந்து கொள்வது அவசியம். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் 9ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலையை தரப்போகிறார். சிலருக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வும் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வரும் நெருக்கடிகளை சமாளிக்க பழகிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். காரணம் குரு பகவான் இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சிலருக்கு திருமண யோகமும் கைகூடி வரப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டினை பார்ப்பதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீடு மனை யோகம் அமையும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வந்துள்ளது. கல்வியில் முன்னேற்றம் நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை யோகமானதாக உள்ளது. கடன் உதவி கிடைக்கும். அற்புதமான கால கட்டம். உடலில் ஏற்பட்டிருந்த நோய்கள் நீங்கப்போகிறது. அஷ்டம ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுகிறார். நல்ல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவீர்கள். அறுவை சிகிச்சை மூலம் நோய்கள் குணமடையும் காலம் வந்து விட்டது.
குரு பகவானின் அருளால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். கேட்ட இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். அலுவலகங்கள், ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். இல்லாவிட்டால் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள்.

வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் வந்துள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கை கால்களில் நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. தான தர்மங்கள் செய்ய வேண்டும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications