குரு பெயர்ச்சி பலன் 2023: காதல் மலரும்..கல்யாண யோகம் இந்த 4 ராசிக்காரருக்கு கைகூடி வரும்

ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் யாருடைய வாழ்க்கையில் காதல் மலரும், கல்யாண யோகம் யாருக்கு கைகூடி வரும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் ஓராண்டுக்கு மேஷ ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் சுப கிரகம்.அனைவருக்குமே நல்லது மட்டுமே செய்வாம். வேத ஜோதிடத்தில் குரு முழு சுபர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் மேஷ ராசிக்கு வரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் காதல் மலரும் கல்யாண யோகமும் குழந்தை பாக்கிய யோகமும் கைகூடி வரப்போகிறது.

ஒரு ராசியில் ஓராண்டுகள் பயணம் செய்யும் குரு பகவான் 12 ஆண்டுகள் கழித்து மேஷ ராசிக்கு வருகிறார். வாழ்க்கையில் நடைபெறும் நல்லது கெட்டதுகளை நிர்ணயம் செய்பவர் குரு பகவான். திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்றவைகளுக்கு குரு பலன் வந்து விட்டதா என்று பார்ப்பார்கள்.

குரு பலன் ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீடு, நிலம் வாங்குவதற்கும் குரு பலன் அவசியம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல மனிதர்களின் அனைத்து நல்ல விசயங்களுக்கும் குருவின் அருள் அவசியம்.

நல்ல வாழ்க்கைத்துணை அமையவும் குரு பகவானின் அருள் தேவை. வெளிநாடு வேலை கிடைக்கவும், விசா கிடைக்கவும் குரு பகவானின் அருள் தேவைப்படுகிறது. குரு பகவான் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் குருவின் பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

Guru peyarchi palan 2023 tamil: Love marriage and Child birth for these zodiac signs

மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஜென்ம குருவாக வரப்போவதால் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். பொன்னான காலமாகும். பூர்வ புண்ணியத்தை குரு பார்வையிடுகிறார். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். குழந்தைகளுக்கு திருமண சுபகாரியம் நடைபெறும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் மலரும், காதலிப்பவர்களுக்கு வெற்றிகரமாக திருமணத்தில் முடியும். நினைத்த காரியம் நிறைவேறும். வரன் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். இரண்டாவது திருமணமும் கைகூடி வரும். ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் வெற்றிகள் தேடி வரும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். கோவில்களில் அன்னதானம் செய்வது ஜென்ம குருவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

ரிஷபம்

Guru peyarchi palan 2023 tamil: Love marriage and Child birth for these zodiac signs

ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் வருவதால் வீடு வாகன யோகம் கைகூடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். குருபகவான் பார்வையால் கடன் பிரச்சினைகள் நீங்கும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்ட, நிலம் வாங்க லோன் வாங்கலாம். உயர்கல்வி யோகம் கை கூடி வரும். வயதானவர்களுக்கு செருப்பு தானம் கொடுங்கள் பாதிப்புகள் குறையும்.

மிதுனம்

Guru peyarchi palan 2023 tamil: Love marriage and Child birth for these zodiac signs

மிதுன ராசிக்காரர்களே.. லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருவது நன்மையை அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரும். நீங்கள் தொட்ட காரியம் வெற்றியைத் தேடி வரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தொழில் அமையும். இளைய சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஏழாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணம் கைகூடி வரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் கைகூடி வரப்போகிறது மகிழ்ச்சியான மண வாழ்க்கையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

கடகம்

Guru peyarchi palan 2023 tamil: Love marriage and Child birth for these zodiac signs

கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி தொழில் வெற்றியைத் தேடி தரப்போகிறார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பத்தில் வரும் குரு பகவான் பதவி யோகத்தை தருவார். குரு பார்வையால் நல்ல தன வருமானம் வரும், வீடு சொத்து வாங்கலாம். திருமணம் சுப காரியம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வயதானவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள் வெற்றிகள் தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+