Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பார்வையால் கோடி நன்மை.. கல்யாண வைபோகம் யாருக்கு கைகூடும்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: நவகிரகங்களில் குருபகவான் ஐந்தாவது வரிசையில் இருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. குருபலம் வந்தாலே திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்கும். 90 கிட்ஸ் நிறைய பேருக்கு இன்னமும் கல்யாணம் கைகூடி வரவில்லை. மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யும் குருபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு குரு பலம் கிடைக்கிறது என்றும் குரு பலனால் யாரக்கெல்லாம் கல்யாண வைபோகம் கைகூடி வரப்போகிறது என்றும் பார்க்கலாம்.

குரு பலம் பெரும் ராசிகள்: மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணமும், புத்திரபாக்கியமும் கடவும் கொடுக்கும் வரம். நல்ல துணை அமைவதும், நல்ல புத்திரர்கள் பிறப்பதும் நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். ஜாதகத்தில் குரு அமர்ந்திருக்கும் இடம் குருவின் ஸ்தானம். அங்கிருந்து 5,7,9 ராசிகளை அவர் பார்ப்பார். இதையே குருபார்வை என்கிறோம். குரு இருக்கும் இடத்தை விட குருவின் பார்வை படும் இடங்களே சிறப்பானது. மேஷ ராசியில் இருந்து குரு பகவான் தனது பொன்னொளி பார்வையால் சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பலமடையச் செய்கிறார். இந்த பார்வையால் எந்தெந்த ராசிக்கு குரு பலம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023: Tiumana yogam Tharum Guru palan - Who will get Marriage yogam

குருபகவான்: காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப் பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று வாக்குகள் உண்டு. ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. கௌரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். குருவருள் கிடைக்க முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை மாலை சாற்றலாம். வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, மாலை ஐந்து மணிக்கு மேல் வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும்.

திருமண தடை அமைப்பு: திருமணமோ, குழந்தை பாக்கியமோ கிடைக்க நேரம் காலம் வரவேண்டும். தசாபுத்தி அந்தாரம், கூடவே குரு பலம், பார்வை யோகம் வரவேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டால் திருமண தடையும், ஐந்தாம் அதிபதி எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானதிபதி பலவீனமடைந்தால் புத்திர தடையும் ஏற்படும். களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். ஐந்தாம் இடத்தில் குரு தனித்து இருந்தால் அது காரகத்தை பாதிக்கும். தாமதமாக குழந்தை பிறக்கும். குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மேஷம்: ஜென்மகுருவாக அமரும் குருவின் பார்வையினால் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.

மிதுனம்: குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும்.

சிம்மம்: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். உங்கள் ராசியையும் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது. ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதின் ஆசைகள் நிறைவேறும். குருவின் அருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.

துலாம்: பொன்னவன் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது முழுவதுமாக விழுவதால் நீங்க நினைத்தது நிறைவேறும். தொட்டது துலங்கும். ஏழாம் வீட்டில் அமர்ந்து குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். உங்கள் ராசியை குரு பார்ப்பது ராஜயோகத்தை தரும். ராஜங்க பதவி தேடி வரும். மனதிற்குப் பிடித்த மனைவி அமைவாள். நீண்ட நாட்களாக பிள்ளைகள் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த உங்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு: குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். ராசிக்கு 9ஆம் வீடு, 11ஆம் வீடுகளின் மீது குருபகவானின் பார்வை விழுகிறது. குரு பலம் வந்து விட்டதால் உங்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். குரு பகவான் பார்வையால் பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல செய்தி தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லையே என்று ஏங்கி தவிக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கும்பம்: குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுவாழ்க்கை அமையும். எனவே தைரியமாக ஜாதகத்தை எடுங்க வரன் பார்க்க ஆரம்பிக்க நல்லமுறையில் கை கூடி வரும். ஐப்பசியில் கெட்டிமேளச்சத்தம் நிச்சயம் உங்க வீட்டில் கேட்கும்.

தோஷ நிவர்த்தி பரிகாரம்: திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும். பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் லக்னகாரர்கள், ராசிக்காரர்கள் ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். இந்த பரிகாரங்களை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+