குரு பெயர்ச்சி பலன்: ஜனவரி முதல் குரு தரப்போகும் அஷ்டலட்சுமி யோகம்.. உச்சத்திற்கு செல்லப்போவது யார்
சென்னை: மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் அள்ளித்தரப்போகிறார்.
குரு பெயர்ச்சி: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யும் அதே நேரத்தில் சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்களை பார்வையிடுகிறார். மீனம், மிதுனம் ராசிக்காரர்களுக்கும் எண்ணற்ற யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொல்வார்கள்.

அஷ்ட லட்சுமி யோகம்: ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரும் குருபகவான் ஒருவருக்கு பணம், பதவி, பட்டம் புகழ், உயர் கல்வி, குழந்தை பாக்கியம், ஞானம் ஆகியவற்றை வழங்குகிறார். குரு பார்த்தாலே அந்த இடம் சுபிட்சமாகும். நமக்கு குரு பலனும் வரும். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்வதாலும் மே மாதம் முதல் ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எனவே 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சில ராசிக்காரர்களுக்கு அஷ்ட லட்சுமி யோகமும், கஜலட்சுமி யோகமும் கிடைக்கப்போகிறது.
மிதுனம்: உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் ஜனவரி மாதம் முதல் செய்யும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உங்களுக்கு கஜலட்சுமி யோகம் கை கூடி வரப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் வரப்போகும் யோகங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள். உங்க ராசிக்கு முன்று, ஐந்து, ஏழாம் வீடுகளை குரு பார்ப்பதால் திருமண யோகம் கைகூடி வருகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஜனவரி மாதம் முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும் கோடீஸ்வர யோகம் கைகூடி வரப்போகிறது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி முதல் புதிய வாய்ப்புகள் தானாக தேடி வரும் பாக்கியங்கள் உங்களை தேடி வரும். பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்திற்கும் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது அதை அனுபவிக்க தயாராக இருங்கள். மே மாதம் வரைக்கும் குருபகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் வருமானம் கிடைக்கப் போகிறது. குருவினால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும்.
துலாம்: குரு பகவான் துலாம் ராசிக்கு நேர் எதிரே அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கஜலட்சுமி யோகம் கை கூடி வரப்போகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பார்வை ஏழாம் பார்வையாக நேரடியாக விழுகிறது. ஏழில் குரு வந்தால் நேரடியாக ராசியை பார்ப்பார். கடன்கள் அடையும். கேட்கிற வரம் கிடைக்கும். குருவின் நேரடி பார்வை விழுவதால் ஆசைகள் நிறைவேறும். தடைகள் நீங்கும். மன திருப்தியாக இருப்பீர்கள். முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு யோகம் நிறைவேறும். நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வையால் பெரியவர்களின் வாழ்த்துக்கள் ஆசிகள் கிடைக்கும். வேண்டிய வரங்களை கடவுள் கொடுப்பார். பணவரவும் லாபங்களும் கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்தில் நேர்கதியாக பயணம் செய்யும் குருபகவான் தனது அபரிமிதமான பார்வையால் கோடீஸ்வர யோகத்தை அள்ளித்தரப்போகிறார். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் கை கூடி வரப்போகிறது. அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். குரு தனது ஐந்தாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், பார்வையிடுவதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும்.
மீனம்: உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் ஜனவரி மாதம் முதல் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் மேன்மையடையும். சுப நிகழ்ச்சிகள், திருமணம் நடைபெறும். குழந்தைகள் கல்வியில் மேன்மையடைவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் வருமானம் பெருகும், புதிய வேலை கிடைக்கும். நோய்கள் குணமடையும். இரண்டாம் வீடு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். எப்பவுமே குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமரும் போது அந்த குடும்பத்தை சுபிட்சமடையச் செய்வார். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். நிறைய பண வருமானம் வரப்போகிறது.












Click it and Unblock the Notifications