7 வருட கஷ்டம் எல்லாம் ஓவர்.. குபேர யோகம் வருது! விருச்சிக ராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருச்சிக ராசிதாரர்களுக்கு மே 1ம் தேதி தொடங்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களுக்கு என்னவெல்லாம் பலன் கிடைக்கும்? என்பதை இங்கே பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 6- 7 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். உங்களுக்கு இந்த மே 1ம் தேதி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Guru peyarchi rasi palan 2024 What it is meant for Viruchchika Rasi

மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும்.

குரு பெயர்ச்சி பலன்: குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது. மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.

கஷ்டப்பட்டீர்கள்: கடந்த 6-7 வருடமாக நீங்கள் கடுமையாக பல விஷயங்களில் கஷ்டப்பட்டீர்கள்.

உங்கள் பொருளாதாரம் மிக மோசமாக நலிவடைந்தது.

உங்களின் சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களின் வீட்டை கூட காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

உங்களின் குழந்தைகள், பெற்றோர்களின் பொருளாதாரமும் மோசம் அடைந்தது.

ஆரோக்கிய ரீதியாக சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, வயிற்று பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது.

விருச்சிக ராசிக்கு என்ன நடக்கும்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்டது விருச்சிகம்.

இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் விருச்சிக ராசிக்கு எல்லாம் நல்லதே நடக்க போகிறது.

இந்த வருடமே வீடு கட்டுவீர்கள். மே மாதமே நிலம் வாங்கும் வாய்ப்பு இருக்கும். தொட்டது துலங்கும்.

இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நல்லதே நடக்க தொடங்கும்.

பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள்.

வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.

வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.

குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம்.

உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள். அவசரப்பட வேண்டாம்.

போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும்.

என்ன செய்ய வேண்டும்: மதுரை மீனாட்சி கோவில்களுக்கு செல்வது நல்ல பரிகாரமாக அமையும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு குரு பெயர்ச்சிக்கு பின் சென்று பூஜை செய்வது பலன் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+