Guru Peyarchi: மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சியில் வரும் மாற்றங்கள்.. நிதானம் ரொம்ப முக்கியம் பாஸ்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருவின் அருள் கிடைக்கும் காலகட்டம். வாழ்க்கையில் நிம்மதியை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பீர்கள். எல்லா இடங்களிலும் உங்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வெளியில் இருந்து உங்களைப் பார்க்கும்போது நன்றாக இருப்பது போலத் தோன்றினாலும், சனி பகவானால் பல அடிகளை வாங்கியிருப்பீர்கள். சந்திரன், புதனாலும் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.
மாற்றம் முன்னேற்றம்
உங்களுக்கு வாழ்க்கையில் சிறந்த பாடங்களை யாராவது ஒருவர் கொடுப்பார்கள். அவரால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்குவதற்கான அமைப்பு இந்த ஆண்டு மிகவும் குறைவாகவே உள்ளது.
குடும்பம்
வேலையில் இருக்கும் இடத்தில் இருந்தே அந்த வேலையில் அடுத்தபடிக்குச் செல்வது அல்லது வேறொரு இடத்திற்கு வேலை மாறிச் செல்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். மிதுன ராசியினர் கனவுலகத்திற்கு அடிக்கடி செல்லாமல் நிதானத்தோடு இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் அந்நியோன்யம் குறைவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தேவையில்லாமல் சந்தேகப்படுவது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்த்து அந்நியோன்யத்துடன் இருப்பது நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தால் தேவையில்லாத பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. தொழிலில் முடங்கியுள்ளவர்கள், நிதி சார்ந்த பிரச்சனையில் இருப்பவர்கள் சூது சம்பந்தப்பட்ட விஷயங்கள், சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டால் கண்டிப்பாக சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
திருமண யோகம்
திருமணத்திற்கான யோகம் உண்டாகும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணையும் யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படும். குருவின் அருளால் பண வரவு நன்றாக இருக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான யோகம் உண்டு.
வழிபாடு
கடனில் இருந்து வெளிவரும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உள்ளது. சிறிது சிறிதாக கடனை அடைத்து முடிப்பீர்கள். வம்பு, வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடித்தால் அதிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்படும். படபடப்பு, அவசரத் தன்மை, திடீர் முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எந்த விஷயங்களாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவது நன்மை பயக்கும். சூரியணார் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications