Guru Peyarchi: ஆட்டத்தை ஆரம்பிககும் சிம்ம ராசி.. பேச்சினால் வரும் பேராபத்து.. ரொம்ப கவனம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடக் கூடிய காலகட்டம். கடந்த காலங்களில் சனி பகவானால் நிறைய பாதிப்புகளையும், சவால்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். அதிகமாக இழப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். பணம் இழப்பு, வாழ்க்கைத் துணையால் பிரச்சனை என நிறைய மன வருத்தங்களுடன் இருந்திருப்பீர்கள். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பெரிய விடுதலையையும், நிம்மதி பெருமூச்சையும் கொடுக்கும் காலகட்டம்.
வார்த்தையில் கவனம்
எல்லா விஷயங்களிலுமே நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். நல்லதே சொல்லப் போனாலும் கூட அது அவர்களை காயப்படுத்துமா என்று யோசித்துப் பேசுவது நல்லது. மற்றவர்களைப் பற்றி குறையே பேசாமல் இருப்பது நல்லது. குரு முழு பாதுகாப்பையும் கொடுப்பார். நிறைய சட்ட சிக்கல்களில் இப்போது இருப்பீர்கள். இதற்கு முன்பு அவமானப்பட்டு அசிங்கப்பட்டிருக்கலாம்.
குருவின் ஆதரவு
ஆனால், இப்போது குருவின் ஆதரவு இருப்பதால் சட்ட சிக்கல்களில் எந்தவிதமான அவமானமும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். தோல் கருமை, சூரிய வெளிச்சம் படாமல் இருப்பது என உங்களை நீங்களே கவனிக்காமல் இருந்திருப்பீர்கள். இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் நல்ல காலகட்டம்.
கடன் தீரும்
கடன் எல்லாமே தீரும் நல்ல காலகட்டம் வேலை போகுமா என்று பயப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு வேலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வேலையில் நிலைத் தன்மை ஏற்படும். அதற்கான வழிவகைகளை குரு பகவான் செய்து கொடுப்பார். ஜூன் மாதம் வரை அமைதியாக இருப்பது நல்லது. அதன் பிறகு அவர்கள் பாதுகாப்பாக இருக்கக் கூடும்.
தொழில்
அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் சிம்மம் வீட்டுக்கு வருகிறார். அந்த காலகட்டத்தில் இன்னும் நீங்கள் வலிமை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இழந்ததை எல்லாம் மீட்டெடுக்கக்கூடிய சூழல் ஏற்படும். நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். தொழில் தொடங்க பிளான் போடலாமே தவிர, தொழில் தொடங்காமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் அதிக பணம் சேரும்.
குழந்தை பாக்கியம்
கடனை அடைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இழந்த பணம் எல்லாம் இனி மீண்டும் வரும். நிறைய இடங்களில் முடங்கியிருந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். திருமண அமைப்பு கைகூடி வரும். வாழ்க்கைத் துணையிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. ஜூன் மாதத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் உணவு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வழிபாடு
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது, அந்தக் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது முன்னேற்றத்தைக் கொடுக்கும். அன்னதானம் கொடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். மனம் தெளிவடையும்.












Click it and Unblock the Notifications