Guru Peyarchi: விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாகவே நிறைய குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஆண்டு குரு பகவான் உங்களுக்கான அங்கீகாரம், பொறுப்பைக் கொடுக்கப் போகிறார். இந்தப் பொறுப்பை சரியாகக் கையாண்டால் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான ஆன்மீக சக்தி உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
விருச்சிகத்தை சுத்தி எப்போதுமே பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் கடவுள் நல்ல வாய்ப்புகளைக் கொடுக்கப்ப போகிறார். வரட்டு கெளரவத்தால் அந்த வாய்ப்பை, அங்கீகாரத்தை விட்டுவிட்டு வராமல் இருப்பது நல்லது. கோபத்தால் தப்பான முடிவை எடுக்காமல், யோசித்து செயல்படுவது நல்லது. வாய்ப்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொழில் யோகம்
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொழில் செய்வதற்கு, தொடங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். தொழில் தொடங்குவதற்கான தைரியம் ஏற்படும். சொத்துகள் வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கான பார்வை தெளிவாக இருக்கும். சொத்துகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். இடமாற்றங்கள் ஏற்படும்.
கடன்
புதிய கடன்களை வாங்குவீர்கள். இனி இந்த கடனை என்னால் அடைக்க முடியும் என்ற நம்பிக்கையின் மூலம் கடனை வாங்கி விரிவாக்கம் செய்வீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சியும் நன்றாக இருக்கும். வேறு ஊருக்கு, வெளியூருக்குச் செல்வதை விட இருக்கும் இடத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தைப் போடுவீர்கள்.
யோகம்
திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம், வாழ்க்கை முறை நன்றாக இருக்கும். மற்றவர்களை மிகவும் நம்புவார்கள். இந்த காலகட்டத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்குவதைவிட இவரே முடிவெடுத்து நேரடியாக வேலையை செய்வது நல்லது. திருச்செந்தூர் குரு பகவான், தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
குருப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு என்ன பலன்?.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications