பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் கை மேல் பலன்.. குரு வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்கு அடிக்கும் யோகம்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இந்த குரு வக்ர நிவர்த்தியால் தனுசு ராசியில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
குரு தற்போது ரிஷபம் ராசியில் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
தனுசு ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்குள் மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரம் உள்ளது. மூலம் என்பது கேது நட்சத்திரம். பூராடம் என்பது சுக்கிரன் நட்சத்திரம், உத்திராடம் சூரியனுடைய நட்சத்திரம். எந்த ஒரு விஷயமானாலும் தொடங்கி வைப்பவர்களாக தனுசு ராசிக்காரர்களாக இருப்பார்கள். எடுத்த விஷயங்கள் அனைத்தும் அப்படியே கிடப்பில் உள்ளது, எதுவுமே நடக்கவில்லை என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருந்திருப்பீர்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் நடைபெறாததால் மன விரக்தி அடைந்திருப்பீர்கள்.

குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தடை நிவர்த்தி உண்டாகும். சிறிய ஒளி தெரிகிறது என்ற எண்ணம் ஏற்படும். உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக மாறுவதற்கான தொடக்கமாக இந்த குரு வக்ர நிவர்த்தி காலம் அமையும். மே மாதத்தில் மிதுனத்துக்கு குரு வந்து ஏழாம் பார்வையாக பார்க்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். ஆவணி மாதத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். ரோகிணி நான்காம் பாதத்தில் குரு நிவர்த்தியாவதால் விடுதலை பெறுவீர்கள்.
பணம் கேட்டிருந்த இடங்களில் இருந்து கிடைக்கும். இதுவரை காசு தண்ணியாக உங்களிடம் இருந்து செலவாகிக் கொண்டிருந்திருக்கும். போராட்டமான காலமாக இருக்கும். பிடிவாதம் பிடித்த குழந்தைகள் உங்களுடைய சொல் பேச்சை கேட்க ஆரம்பிப்பார்கள். மனைவி, குழந்தைகள் உங்களை மதிப்பதற்கான நேரம் உண்டாகும். பணம் பெரியளவில் வரவில்லை என்றாலும் சிறியது சிறியதாக வர ஆரம்பிக்கும்.
அலைபாயும் மனது, தூக்கமின்மை, உடல் உபாதை, வயிறு தொடர்பான பிரச்னைகள் போன்றவை சரியாகும். வெளியூர் போகக்கூடிய வாய்ப்பு, புதிய வேலை வாய்ப்பு, மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு போன்றவை அமையும் சிறந்த காலமாக இருக்கும். தொழில் துறை சார்ந்து படிக்கக்கூடிய மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோனடிக்கல் இன்ஜினியரிங் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.
பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சிறிய மாற்றங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல திருப்பத்தைக் கொடுக்கும். அருகில் இருக்கக்கூடிய ஏதாவதொரு கோவில், வேதபாட சாலையில் இருக்கும் வேத விற்பன்னர்களுக்கு உங்களால் முடிந்த வரை வஸ்திர தானம் கொடுப்பது நன்மை பயக்கும். அல்லது பசு மாடு, கால்நடைகளைப் பராமரிப்பதற்கான ஒருநாள் செலவையாவது ஏற்றுக் கொள்வது நன்மை பயக்கும். இந்த தானம் உங்களுக்கு நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.












Click it and Unblock the Notifications