கோடீஸ்வர யோகம்.. குரு வக்ர நிவர்த்தியால் ரிஷபம் ராசிக்கு ஜாக்பாட்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது ரிஷபம் ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.
குரு தற்போது ரிஷப ராசியில் வக்ரமாக வீற்றுருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.. குரு தனம், குடும்பத்துக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

ரிஷப ராசியின் சொந்த வீட்டில் குரு வக்ர நிலையில் உள்ளார். குரு பொதுவாக அவர் அமரும் இடத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவார். இதை கால புருஷ தத்வம் என்பார்கள். தன காரகனான அவர் தன வரவை கெடுத்திருப்பார். குடும்பம், பணம் எல்லாவற்றை பற்றியும் எண்ணம் அதிகம் இருந்திருக்கும்.
ஆனால் அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்ற தெளிவு கிடைக்காமல் குழப்பத்தால் கவலையில் இருப்பார்கள். முகத்தில் பொலிவிழந்து இருண்டு போயிருக்கும். குரு பெரிய கிரகம் என்பதால் இனி மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ தொடங்கும். ரிஷப ராசி என்பது நிலத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.
அதனால் குரு வக்ர நிலை உங்கள் வாழ்க்கை அதள பாதாளத்துக்கு சென்றது போன்ற பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். நீங்கள் சந்திக்காத பிரச்னையே இருந்திருக்காது. இனி உங்களின் வாழ்க்கையில் வெளிச்சம் வரப் போகிறது. நீங்கள் தள்ளப்பட்டதாக நினைத்த பாதாளத்தில் இருந்து மீண்டு நம்பிக்கை விதைகளை நடுவீர்கள்.
கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் முற்றிலும் நீங்கி படிப்படியாக நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். கடவுள் உங்களுக்கு வைத்த அனைத்து சோதனைகளையும் கடந்து வந்திருப்பதால் தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிட்டு வெற்றி கொடி நடுவீர்கள். தைரியம் அதிகரிக்கும்.
குடும்பம், பணம் ஆகிய இரண்டு விஷயத்தில் தெளிவான சிந்தனைகளால் லாபம் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட காலமாக செயல்படுத்த நினைத்த காரியத்தை நிறைவேற்ற இது சரியான காலம். எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அதை பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்குவதன் மூலம் முழு வெற்றியை அடையலாம்.
எண்ணம் போல நல்ல முன்னேற்றத்தை அடையவும் இது உதவியாக இருக்கும். வளர்ச்சியை நோக்கி உயர்ந்த சிந்தனைகளை வைத்து அதை தீர்க்கத்துடன் செயல்படுத்துவீர்கள். ஆலமரத்தில் வேர் எப்படி படர்ந்து இருக்குமோ, அப்படி உங்களின் சிந்தனைகளை கடின உழைப்பாக அதை பரவலாக்க வேண்டும்.
பழைய கடன் நெருக்கடி குறையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து புதிய கடன்கள் கிடைக்கும். சம்பள பாக்கி தீரும். சமூகத்தில் பெரிய இடத்தில் உள்ள மனிதர்கள் உங்களை வழி நடத்துவார்கள். உண்மையில் உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. அதனால் காரியங்களை தெளிவாக திட்டமிட்டு பலனடையுங்கள்.
மே மாதத்தில் நிகழ உள்ள குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கோடீஸ்வர யோகம் பெறும் அமைப்பு உங்கள் ராசிக்கு உள்ளது. குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications