சொந்த வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம்.. குரு வக்ர நிவர்த்தியால் கும்ப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இந்த குரு வக்ர நிவர்த்தியால் கும்ப ராசியினருக்கு பல்வேறு அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகின்றன. வீடு, மனை, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. கும்ப ராசியினர் அனுபவிக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக காணலாம்.
குரு தற்போது ரிஷபம் ராசியில் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

கும்ப ராசி, கும்ப லக்ன நேயர்களே உங்கள் ராசியில் இருக்கும் அவிட்டம், சதயம், பூராட்டாதி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த குரு நிவர்த்தியால் கிடைக்கப் போகும் பலன்கள், பயன்கள், பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுடைய நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் குரு வக்ரத்தில் அமர்ந்திருந்தார். பிப்ரவரி 5 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடையப் போவதால் வாகனம், வீடு, மனை விஷயங்களில் இதுவரை ஏற்பட்டு வந்த சோதனைகள் நிவர்த்தியாகும். தாயார் உடல்நலனில் இருந்து வந்த பாதிப்புகள், தாயார் குறித்த கவலைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
மனக் குழப்பத்தில் இருந்து தெளிவு பிறக்கும். இதுவரை மனதில் இருந்து வந்த பயங்கள், குழப்பங்களால் ஆவணி மாதம் முதல் பாதிக்கப்பட்டு வந்திருப்பீர்கள். தை மாதம் 22 ஆம் தேதி அன்று வக்ர நிவரத்தியானது உங்களுக்கு அருமையான பலன்களை கொடுக்கப் போகிறது. 12 வீடுகளில் 11 வது வீடு லாப ஸ்தானம். அந்த இடத்தில் இருக்கக்கூடிய கும்ப ராசி, லக்னத்தில் 4 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குரு உங்களுக்கு 2, 10 ஆம் இடத்தைச் சேர்ந்தவர்.
2, 10 தொடர்புடையவர் 4 இல் அமர்ந்திருக்கிறார். 2 வது இடம் என்பது குடும்பம், தன ஸ்தானம், 10 என்பது தொழில் ஸ்தானம். எனவே, நல்ல தொழில், லாபத்தையும் கொடுத்திருக்க வேண்டும். லாபம் கொடுக்கவில்லையே என்பவர்களுக்கு மே மாதத்தில் இருந்து லாபம் கொடுக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள், எதிர்பாராத விஷயங்கள் அனைத்தும் உண்டாகும்.
உடல் உபாதைகள், தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதில் இருந்து மீண்டு வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவீர்கள். ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும். நடைப்பயிற்சி மேற்கொள்ளத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களுடைய சொல் படி வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு கார், வீடு, நிலம் வாங்கும் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். வேலைக்கு ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள். நீதித் துறை நிதித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் வரும். வழக்குரைஞர்களாக இருப்பவர்களுக்கு நீதிபதியாகும் வாய்ப்பு ஏற்படும். நீதிபதியாக இருப்பவர்களுக்கு உயரிய பதவிகள் கிடைக்கும்.
தொழில் துறையில் இருப்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாய்ப்புகள் அனைத்தும் உங்கள் கதவைத் தட்டும். உங்களுக்கு பண வரவு மெதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் வந்து சேரும். நீண்டகாலத்தை நோக்கி முதலீடு செய்வது நல்லது. பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்களுக்கு கேஸ், ஆயில் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு காலகட்டத்தையும் நீங்களே செதுக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
பரிகாரங்கள்: ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை, பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது நல்லது. இது பத்தை நூறாக மாற்றி உங்களுக்கு பலனைக் கொடுக்கும். இந்தப் பரிகாரம் குருவின் அருளை உங்களுக்கு அதிகரிக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications