Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனம் ராசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த குரு.. வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டம் கொட்டும், பண மழைதான்

Subscribe to Oneindia Tamil

குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இந்த குரு வக்ர நிவர்த்தியால் கும்ப ராசியினருக்கு பல்வேறு அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகின்றன. வீடு, மனை, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. கும்ப ராசியினர் அனுபவிக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக காணலாம்.

குரு தற்போது ரிஷபம் ராசியல் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

guru vakra nivarthi meenam

மீன ராசி, மீன லக்ன நேயர்களே பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்றே மூன்று நட்சத்திரத்தை ஒரே கொண்டவர்கள். உங்களுடைய ராசி நாதன் குரு பகவான். குரு பகவான் மூன்றாம் இடத்தில் ரிஷபத்தில் வக்ரமாக அமர்ந்திருக்கிறார். அந்த வக்ரம் தை மாதம் 22 ஆம் தேதி நிவர்த்தியாகிறது. இதனால், நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். குரு உங்களுக்கு அருளைக் கொடுக்கும் காலமாக இருக்கும்.

உங்களுக்கு தொழில் காரகனாக குரு இருப்பதால் உங்களுக்கு அனைத்துவிதமான நல்ல வாய்ப்புகளும் ஏற்படும். உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரம் என்பது குருவின் நட்சத்திரம், உத்திரட்டாதி சனியிந் நட்சத்திரம், ரேவதி நட்சத்திரம் புதனுடைய நட்சத்திரம். சனியும் புதனையும் சேர்ந்து வரும்போது ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன் உச்சம் ஆகப்போகிறார். சுக்கிரனுடைய ராசி வீட்டில் தான் குரு தற்போது இருக்கிறார்.

பண வரவு இருக்கும். கொடுப்பதற்கான எண்ணங்கள் வரும். மனது அலைபாயும் நிலை மாறி பணம் சார்ந்த எண்ணங்கள் மோலோங்கும். நினைத்ததை கொடுக்கக் கூடிய நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே பரஸ்பரம் அன்பு பெருகும். பணப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். இதற்கான முயற்சிகள் செய்வதற்கான காலகட்டமாக இந்த குரு வக்ர நிவர்த்தி காலமாக இருக்கும்.

நேரடியாக குரு மிதுனத்துக்குப் போக ஆரம்பித்த பின்னர் உங்களுடைய 4 ஆம் இடமான சுக ஸ்தானத்துக்கு வந்துவிடுவார். அங்கிருந்து ஐந்தாம் இடத்துக்கு அதிசாரமாக கடகத்துக்குப் பயணமாகவுள்ளார். இனி குரு பகவானின் கிரீன் சிக்னல் கிடைத்துவிடும். குரு கடாட்சத்தால் உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்களைக் காண்பீர்கள்.

ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் குரு பகவானின் அருள் பூரணமாக கிடைக்கும். பொருளாதார அடிப்படையில் நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் நல்லது. தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்தினாலே உங்களுக்கு வரவு தானாக உண்டாகும். இந்த வாய்ப்பை குரு வக்ர நிவர்த்தி உங்களுக்கு தந்தருளும்.

கடின உழைப்பால் அனைத்து காரியங்களிலும் உயர்வைப் பெறுவீர்கள். கஷ்டப்படுவதில் தப்பில்லை என்பதை மனதில் ஆழமாகப் பதியவைப்பது நல்லது. உங்கள் கடின முயற்சிகள் புதிய பரிமாணங்களை உங்களுக்குத் தரும்.

பரிகாரகங்கள்: ஏகாதசியன்று உபவாசம் எனும் ஒரு பொழுது விரதம் இருப்பது நல்லது. அருகில் இருக்கக்கூடிய விஷ்ணு கோயில்களுக்குச் சென்று அவரை வழிபடுதல் நல்ல பலன்களைத் தரும். இந்த வழிபாட்டின் மூலமாக குபேர சம்பத்து எனும் யோகம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+