Guru Vakram: தனுசு ராசிக்கு அடுத்தடுத்து 4 மாதங்களில் நடக்கும் அதிசயம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு வண்டி, வாகனங்களில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. கை, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் கைகூடும் வாய்ப்புள்ளது. திருமண யோகம் கண்டிப்பாக உண்டு. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
தொழில் தொடங்கும் யோகம்
புதிய தொழில், வியாபாரம் தொடங்கும் பாக்கியம் உள்ளது. கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல இடத்தில் இருப்பது, டீலர்சிப், ஏஜென்சி தொடங்குவது போன்ற பாக்கியங்கள் உண்டு. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்து விற்கும் யோகம் உண்டாகும். வீட்டுக்கு விருந்தாளி வரும் யோகம் உண்டு. அந்த விருந்தாளியால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றி ஏற்படும் யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
குரு வக்கிரமாக இருக்கும்போது வராத விருந்தாளி வீட்டுக்கு வந்தால் அற்புதமான யோகம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.. திருமண யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் நீங்கும். அனைத்து விஷயங்களுமே இனி உங்களுக்கு பாசிட்டிவாக நடக்கும்.
பணவரவு கொட்டும்
காசு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. 2 ஆம் இடத்தில் குரு வக்கிரமாகும்போது நேரடியாக லக்கினத்திற்கு பார்வை படும்போது காசு பணத்திற்கான வரவு அதிகரிக்கும். நாம் செய்வது சரி என்ற எண்ணம் தோன்றும். தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். யார் உங்களைப் பார்த்தாலும் மரியாதை கொடுப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகள், தேவையில்லாத போன் கால்கள், நட்பு போன்றவற்றை விட்டு விலகுவது நல்லது.
வழிபாடு
மற்றபடி எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் இல்லை. நிறைய நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து இந்த 4 மாதங்களில் நடக்கும். மகிழ்ச்சி ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகளைப் பெறுவீர்கள். ராமன் வழிபாடு, சீதா ராமச்சந்திரன் வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications