Guru Vakram: கும்ப ராசிக்கு குதூகலமான காலகட்டம்.. பெரிய ஜாக்பாட் காத்திருக்கு
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு வேலை, தொழில், உத்தியோகம் போன்றவற்றில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது தேவையில்லாத கற்பனைகள், பயம், சிந்தனைகள் தோன்றும். நாளைக்கு என்ன நடக்குமோ, திடீரென இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்பது போன்ற நிலைமைகள், குழப்பங்கள் எல்லாம் மாறும். பிரச்சனைகளில் இருந்து வெளிவரக்கூடிய யோகம் உண்டாகும்.
வீடு வாங்கும் யோகம்
புரோக்கரேஜ், கமிஷன் தொடர்பான வேலைகள், ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், பொருள்களை விற்பனை செய்யக்கூடிய யோகம், நீண்ட நாட்களாக வராத பணங்கள் திரும்பக் கிடைப்பது, ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்வது போன்ற யோகம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துகளை விற்று அதன் மூலம் புதிய வீடு வாங்கும் பாக்கியம் ஏற்படும். பழைய சொத்துகள் விற்பனையாகும்.
கடன்கள் அடையும்
கும்பத்தைப் பொருத்தவரை வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாட்டரி அடிக்கும் யோகம் உண்டாகும். குரு வக்கிரமாகும்போது, திரிகோணத்தில் ராகு இணைந்து, புதன் வீடும் சனி வீடும் இருக்கும்போது எதிர்பாராமல் கடன்கள் அடையும். அந்த கடன்கள் எதிர்பாராத வகையில் வரும் பணம் மூலமாக அடையும் யோகம் உள்ளது. நிறைய பேருக்கு மனோநிலை மாறும். இவ்வளவு நாள் நாம் செய்தது தவறு இனிமேல் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
குழந்தை பாக்கியம்
நிறைய பேருக்கு ஆண் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மன மகிழ்ச்சி சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். தெய்வத்தின் அனுக்கிரகம், துணை மூலமாக உங்கள் வாழ்க்கையே மாறும். குறிப்பாக, பழனி முருகனின் அனுக்கிரகம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.
வழிபாடு
குரு வக்கிரமாக இருக்கும்போது இந்த 4 மாதங்கள் அற்புதமான மாற்றங்கள் உண்டாகும். பல நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் நடக்கும் ஸ்தானம். காதல் கைகூடும். நல்ல நேரமாக இருப்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பெரும் பணத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். பரிசாக நல்ல ஊதியம் கிடைக்கும். சந்தோஷம் ரீதி 85 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்றாக இருக்கும். தைரியமாக ஒரு வேலையை எடுத்து ஜெயிக்கக்கூடிய கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications