Guru Vakram: அடுத்த 4 மாசத்தை கெட்டியா பிடிச்சுக்கோங்க – மகர ராசிக்கு செம அதிர்ஷ்டம்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு உத்யோகம், தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகும். கடந்த காலங்களில் வாட்டி வதைத்த சூழலில் இருந்து சற்றே நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உத்யோகம், தொழிலில் இரண்டிலும் ஓரளவுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு உத்யோகத்தில் சிறு சிறு பதவி உயர்வு, புதிய பொறுப்பு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும்.
மகிழ்ச்சி
உத்யோகத்தில் உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் மொத்தமாக அமைதியாவார்கள். எதிரிகள் விஷயத்தில் உங்களுக்கு அருமையான வெற்றி கிடைக்கும். பகை மொத்தமும் தூள் தூளாகும். கடந்த காலங்களில் உங்கள் மனது வாடிய நிலையில், இப்போது மகிழ்ச்சியால் மலரும். பிரச்சனைகள் அவ்வபோது இருந்தாலும், தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என்று மகிழ்வீர்கள்.
கூடுதல் வருவாய்
உங்கள் ஊதியத்துடன் கூடுதல் வருவாய் கிடைக்கும். வீட்டு வாடகை, கூடுதல் பணி, தொழில் உள்ளிட்டவற்றால் கூடுதல் வருவாய் கிடைக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்த்தபடியான இடமாற்றம் நிகழ்வது உறுதி. சிலருக்கு ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
திடீர் அதிர்ஷ்டம்
குழந்தைகளால் இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகி அவர்களால் பெருமை கொள்வீர்கள். உங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நிகழும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு உண்டு. சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து கூட திடீர் அதிர்ஷ்டமாக பணம் வரும்.
முதலீடு
பொருளாதாரம் உயர்வடையும். கடன் சுமை கணிசமாக குறையும். நிலம், வீடு, நகை, பங்குச்சந்தை ஆகியவற்றில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த 4 மாதங்களில் வாழ்க்கையில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும். தன்வந்திரி கோயில் சென்று வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications