Guru Vakram: விருச்சிக ராசிக்கு ப்ரோமோஷன் கன்ஃபார்ம்.. குருவின் அருளால் வரப்போகும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

guru-vakra-peyarchi-2025-what-kind-of-benefits-viruchigam-scorpio-rasi-people-will-get-during-thi

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.

குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.

இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு அஷ்டமத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். பெயர் கெடுதல் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். குழந்தைகளுக்காக தேவையில்லாத செலவுகள் செய்திருப்பீர்கள். குழந்தைகள் தீய விஷயத்தை செய்வது தேவையில்லாத நட்பு, தர்மத்துக்கு மீறி பல காரியங்களை செய்வது, தண்டனைகளில் இருந்து அவர்கள் தப்ப வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். இனி அதுபோன்ற நிலை எல்லாம் பெறும்.

பதவி உயர்வு

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இழந்த பெயரை மீட்டெடுப்பீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்துக்கு குரு போவதால் எதிர்பாராத குழந்தை பாக்கியம், எதிர்பாராத பதவி உயர்வு போன்றவை உண்டாகும். கடவுள் மேல் அலாதி பக்தி, அன்பு உண்டாகும். அமானுஷ்ய சக்திகளை உணருவது போன்ற தன்மைகள் உண்டாகும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காணும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். எதிர்பார்க்காத அனைத்து நல்ல காரியங்களும் இந்த காலகட்டத்தில் நடக்கும் பிராப்தம் உண்டு. அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

வழிபாடு

சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதம் நன்றாக இருக்கும். என்ன விஷயம் தலைக்கு மேல் நடந்து கொண்டிருந்தாலும் நீங்கள் நம்பிக்கை, தைரியத்துடன் இருப்பது நல்லது. அற்புதமான காலகட்டமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். விநாயகப் பெருமானை மனதார வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+