Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Guru Vakra Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் விருச்சிக ராசி.. பிள்ளைகள் விஷயத்தில் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

guru-vakra-peyarchi-palan-in-this-astrology-article-you-can-learn-about-what-kind-of-benefits-viru

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குரு வக்கிரமாகி 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஒரு விதத்தில் நன்மை என்பது போன்ற காகட்டமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பாட்டி, தாத்தா கடந்த சில ஆண்டுகளாக பெரும் கஷ்டத்தை மனதளவிலும், உடம்பளவிலும் பயங்கரமாக ஆரோக்கியப் பிரச்சனைகளை அனுபவித்து வரும் நபர்கள் நல்லபடியாக அவர்கள் சர்கதி அடைய வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பிரச்சனையில் இருந்து வெளிவரும் யோகம் ஏற்படும்.

வீட்டுக் கடன்

வீட்டுக்கென்று கடனை வாங்கி அதனை கட்ட முடியாமல் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருபவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நண்பர்கள் மூலமாக உதவிகள் வரும். அதன் மூலம் கடனை அடைத்து பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். விற்கவே முடியாத விஷயங்களை இப்போது விற்கும் யோகம் ஏற்படும். நிறைய பேருக்கு எதிர்பார்க்க முடியாத மாற்றம் ஏற்படும்.

நிலம் விற்கும் யோகம்

விற்கவே முடியாத நிலத்தை இப்போது விற்று முடிப்பீர்கள். எதிர்பார்க்க முடியாத மாற்றம் ஏற்படும். அஷ்டமத்தில் குரு போகும்போது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் தப்பித்து விடுவீர்கள். குரு வக்கிரமாக இல்லையெனில் உங்களை முடக்கக் கூடிய நிலை ஏற்படும். கெட்ட பெயர், அவப்பெயர் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பிள்ளைகள் விஷயம்

நல்லதுக்காக, குழந்தைக்காக, படிப்புக்காக செலவு செய்வீர்கள். கடன் வாங்கி குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிள்ளைகள் மேல் கடன் வாங்கி படிக்க வைப்பது நல்லது. அப்போது தான் அவர்கள் பொறுப்பறிந்து படிப்பார்கள். எவ்வளவு சுமையைத் தாங்க முடியுமோ அவ்வளவு சுமையை மட்டும் சுமப்பது நல்லது. குரு வக்கிரமாக இருக்கும்போது அதிகளவிலான சுமைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம், உங்களுடைய ஆரோக்கியம், வண்டி வாகனங்களில் கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் அபரிமிதமாக இருக்கும். அதே சமயம் எதிர்பாராத பண வரவு உண்டாகும். திடீரென பெரிய அதிர்ஷ்டம் ஏற்படும். 5 கிரகங்களில் 2 கிரகமாவது ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பெரிய வேலைகளுக்கு பெரிய சம்பளத்தில் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

கவனம்

விருச்சிக ராசியினருக்கு வித்தியாசமான பாகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்ப்பது நடக்காமல் எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். தங்கம் காணாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். மூலப் பத்திரங்களை மறந்து எங்கேயும் வைத்து விடாமல் இருப்பது நல்லது.

வழிபாடு

குரு வக்கிரம் என்பது குழப்ப நிலையிலேயே இருக்கும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதம் நன்றாக இருக்கும். வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் காமதேனு. காமதேனுவை வழிபாடு செய்வது, சேவை செய்வது, புதன்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மையைத் தரும். பூண்டு, வெங்காயத்தை தவிர்த்துவிட்டு சாப்பிடுவது உங்களுக்கு சாத்விகமான எண்ணம் ஏற்படும். அதன் மூலம் வெற்றியைக் காண்பீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+